Kushboo scolding bjp

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பேச்சாளருமான குஷ்பு நெல்லையில், தற்போதைய அரசியல் நிலை குறித்து செய்தியாளரிடம் பேசுகையில், தமிழக முதல்வர் அனைத்து பள்ளிகளுக்கும் யோகாவை கொண்டு வந்ததன் காரணமே பாஜக பின் வாசல் வழியாக உள்ளே நுழையப் பார்ப்பதுதான் என்று தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் ரோசையா ஆளுநர் பதவியில் இருந்து விலகி ஒரு வருடம் ஆன நிலையிலும் ஏன் இன்னும் தமிழகத்திற்காக ஒரு ஆளுநரை நியமிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.

ஆளுநர் வித்யாசாகர் ராவிற்கு கூடுதல் பொறுப்புதானே தவிர, நிரந்தரமான ஆளுநர் இல்லை என்றும், ஒரு முறை ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்திற்கு வந்து செல்ல அவருக்கு விமானத்திற்கு மட்டும் 4 முதல் 5 லட்சம் செலவாகிறது என்றும், அவருக்காக அரசாங்கம் கொடுப்பது அனைத்தும் மக்களின் பணம் என்றும் கூறினார்.

அதே போல் தற்போது ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்சை இணைத்து தினகரனை வெளியேற்றியதும் பாஜக.,தான் என குற்றம் சாட்டினார் குஷ்பு.