kushboo asking why vijayabaskar driver run away with documents

அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் முக்கிய ஆவணத்தை தூக்கி கொண்டு ஓடினார் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டம் என்பது எல்லோருக்கும் சமமானது. யார் வரி கட்டவில்லையோ, பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்களோ அவர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கம்தான்.

இதில் அமைச்சர், பொதுமக்கள் என்ற வித்தியாசமோ, பாகுபாடோ கிடையாது. அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியது தவறல்ல.

அதிகாரிகள் சோதனை செய்தபோது, அவரது உதவியாளர் முக்கிய ஆவணத்தை தூக்கி கொண்டு ஓடினர். உங்களிடம் தவறு இல்லையென்றால் ஏன் ஆவணத்தை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். அந்த காட்சி தற்போது வரை வரைலாக வாட்ஸ்அப் மூலம் பரவி வருகிறதே.

தன்னிடம் 22 மணிநேரம் சோதனை செய்தார்கள். எந்த ஆவணமும் சிக்கவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார்.

அப்படியானால், எங்களிடம் எல்லாமே வெளிப்படையாக இருக்கிறது என்று ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டியதானே? இவர்களிடம் தவறு இருக்கிறது. அது வெளியே தெரிந்து விட கூடாது என்று அதை மறைக்க முயன்றுள்ளனர் என்று அவர்களது செயல்பாடுகளே காட்டிவிட்டது.

ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்து கொண்டேதான் இருக்கிறது. தங்களுக்குதான் வெற்றி என்று சொல்ல கூடியவர்கள் ஏன் பணம் கொடுக்க வேண்டும்.

ரூ.90 கோடி அளவுக்கு பணப்பட்டுவாடா நடந்து உள்ளதாக சொல்கிறார்கள். இதற்கு, தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு குஷ்பு கூறினார்.