கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச் சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது.
கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச் சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சி கூறியுள்ளது.
காதல் திருமணம்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் பகுதி விளந்தகண்டம் அய்யா காலனியை சேர்ந்தவர் சேகர். கொத்தனார். இவரது மனைவி தேன்மொழி. இவர்களுக்கு 3 மகன்களும், சரண்யா (25) என்ற ஒரு மகளும் உள்ளனர். இதில் சரண்யா, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். அப்போது, மோகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கொலை
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. ஆனால், இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், வேறு வழியில்லாமல் கடந்த 5 நாட்களுக்கு முன் சென்னையில் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதை அறிந்த சரண்யாவின் அண்ணன் சக்திவேல், தன் வீட்டிற்கு விருந்துக்கு வரும்படி நைசாக அழைத்து இருவரையும் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? என மக்கள் நீதி மய்யம் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

கொல்வதுதான் கௌரவமா?
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச் சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது.
வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். காதலில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை; ஆணவமும் அவசியமில்லை என்று மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும்" என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.
