கர்நாடக சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது குமாரசாமிக்கு 99 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவும், பாஜக கூட்டணிக்கு 106 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்த நிலையில் குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த அரசியல் மாற்றத்தில் மிகப்பெரிய சதி நடந்ததும், இதற்க்கு காரணமே சித்தராமையா ஆடிய சித்து விளையாட்டு என அரசியல் வட்டாரத்தில் வெளிப்படையாகவே சொல்லப்படுகிறது.

கர்நாடகவில் ஆட்சி அமைக்க  சட்டசபையில் 112 உறுப்பினர்களின் எண்ணிக்கை வேண்டும் என்ற நிலையில், பிஜேபியிடம் 105 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிஜேபி ஆட்சி அமைத்தாலும் நீடிப்பதில் நிறைய சிக்கல்கள் இருந்தன என்று கர்நாடக அரசியல் வட்டாரங்கள் சொல்லிவந்தது. இதனையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்று கொண்டார். 

இந்நிலையில், ராஜினாமா செய்த எம்எல்ஏக்களில் ஒருவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசும் போது,  சித்தராமையா சொன்னதால் தான் நாங்க ராஜினாமா செய்தோம். எங்களுடைய ராஜினாமாவிற்கும் பிஜேபிக்கு எந்த விதமான சம்பந்தமே இல்லை என குமாரசாமியிடம் கூறிவிட்டு சென்றதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து எனக்கும் எம்எல்ஏக்கள் ராஜினாமாவிற்கும் எந்த சம்பந்தமுமில்லை என கர்நாடக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா கூறியுள்ளார். 

மேலும், அவர்கள் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர் எனவும் கூறியுள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சித்தராமையா பெயரை குறிப்பிட்டு சொன்னது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஆகியுள்ளது. இந்த தகவலால் குமாரசாமி தரப்பு அதிர்ச்சிக்கு உள்ளாகியது என கூறுகின்றனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இன்னும் வெளிவரவில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.