Asianet News TamilAsianet News Tamil

ஆதாரங்கள் எல்லாம் பக்காவா இருக்கு.. அதிர வைத்த அரசு தரப்பு… சிக்கலில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.?

ஆவின் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 கோடி  பெற்றதாகப் புகார் எழுந்தது.ஆவின் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 கோடி  பெற்றதாகப் புகார் எழுந்தது.

kt rajendra balaji bail case in the connection of loot in chennai high court
Author
Chennai, First Published Nov 30, 2021, 8:43 PM IST

வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி  மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போலீஸார் தெரிவித்துள்ளனர்.kt rajendra balaji bail case in the connection of loot in chennai high courtமுந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் உள்பட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 3 கோடி  பெற்றதாகப் புகார் எழுந்தது. வேலையும் வாங்கி தராமல் வாங்கிய பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ராஜேந்திர பாலாஜி ஏமாற்றியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுதொடர்பாக விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.kt rajendra balaji bail case in the connection of loot in chennai high court

இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட நால்வரும்  சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான் இறுதி விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் திலக், ‘ முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான புகாரில் இருபத்தி மூன்று சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜிக்கு, அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம்தான் இந்தப் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. மேலும், இந்த வழக்கில் நல்லதம்பியையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது’ என்று வாதிட்டார். மேலும், ‘முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளன” என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி  நிர்மல்குமார், முன்ஜாமின் மனுக்கள் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios