திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.. முகநூலில் போட்ட பதிவால் தொண்டர்கள் அதிர்ச்சி.!
சமீபத்தில் நடந்த காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டதை சமூகவலைதளங்களில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விமர்சித்திருந்தார். மேலும், கட்சி தலைமைக்கு எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார்.
திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் அவரது முகநூல் பதிவு கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்பட்டதை சமூகவலைதளங்களில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் விமர்சித்திருந்தார். மேலும், கட்சி தலைமைக்கு எதிராகவும் கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார். இதனையடுத்து, கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிருந்தும் தற்காலிகமாக (Suspension) நீக்கி வைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டார்.
இதையும் படிங்க;- திமுக செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் நீக்கம்.. என்ன காரணம் தெரியுமா? வெளியான தகவல்..!
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது முகநூல் பக்கத்தில், தாகூரின் `கீதாஞ்சலி’யில் உள்ள வரிகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். அதில், நண்பர்களே, நான் பிரியப்போகும் இந்த நேரத்தில் என்னை வாழ்த்தி அனுப்புங்கள். வானத்தின்வைகறையின் ஒளி செறிந்து விளங்குகிறது. எனது பாதையும் அழகைப் பொழிகிறது. நான் என்னுடன் என்னகொண்டு போகிறேன் என்று கேட்காதீர்கள். வெறுங்கையுடன், ஆர்வ இதயத்துடன் என் யாத்திரை ஆரம்பமாகிறது. நான் எனது திருமணமாலையை அணிந்து கொள்கிறேன். எனது ஆடை பிராணியின் காஷாய உடையன்று.
பாதையில் எவ்வித அபாயங்கள் இருந்தபோதிலும் என் மனதில் எவ்விதப் பயமும் இல்லை. எனது யாத்திரை முடியும்போது அந்தி நட்சத்திரம் எட்டிப்பார்க்கும். அரசனின் அரண்மனையில் இருந்து அந்தி மாலையின் சோக கீதங்களின் இனிய கோஷம் பொழிந்து கொண்டிருக்கும். நான்இந்த வாழ்க்கையை விரும்பும்காரணத்தினாலேயே மரணத்தை நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க;- பொதுமேடையில் அரசியல் நோக்கத்திற்காக தவறான தகவல்களை கூறுகிறார் ஆளுநர்.. சட்டசபையில் கொந்தளித்த Dr.எழிலன்.