NEET MBBS பொருத்த வரை ஒரு மாநிலத்தில் உள்ள 85% இடங்களுக்கு வேற மாநிலத்தை சார்ந்தவர்கள் போட்டி போட முடியாது.. போட்டி தமிழக மாணவர்களுக்குள் மட்டுமே என்ற அடிப்படை விசயம் கூட ஊடகவியலாளர்கள் உட்பட பலருக்கு தெரிவதில்லை. எத கேட்டாலும் அனிதானு வந்தராங்க.. என கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி நக்கல் ட்வீட் போட்டுள்ளதை பலரும் கழுவிக் கழுவி ஊத்துகின்றனர்.

டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்த மாணவி அனிதா, நீட் தேர்வில் தேர்ச்சியடையாததால் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. அதன் எதிரொலியாக தமிழகத்தின் பல இடங்களிலும் நீட் தேர்விற்கு எதிராக போராட்டம் தொடங்கியது.

அப்போது அனிதாவின் மரணம் குறித்து பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, அனிதா தற்கொலைக்கு நீட் தேர்வு காரணமில்லை. வேறு காரணங்களுக்காக அனிதா தற்கொலை செய்திருக்கலாம்.  இதை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். அனிதா மூளை சலவை செய்யப்பட்டுதான் தற்கொலை செய்துள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. சிபிஐ அல்லது விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டால் இந்த ஆதாரங்களை சமர்ப்பிக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், அனிதா ரூ.1 லட்சம் செலவு செய்து பள்ளியில் படித்தார். அவருக்கு அந்த பணத்தை யார் கொடுத்தது என பல்வேறு வகையில் மரணமடைந்த அனிதாவின் மீது இப்படி பழியை போட்டார். இதனால் பொதுமக்கள் மட்டுமல்ல ஊடகங்களும் கிஸ்ருஷ்ணசாமியின் உண்மை முகத்தை கிழித்து தொங்கவிட்டது.

இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டும், திருப்பூரில் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததால் ரித்துஸ்ரீ என்ற மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதே போல பட்டுக்கோட்டையை சேர்ந்த மாணவி வைஸ்யாவும் நீட் தேர்வு தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வில் தோல்வி அடைந்ததாக இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து, நீட் விலக்கு விவாதம் ஊடகங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. 

இந்நிலையில், இந்த மரணத்துக்கு எதிராக பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் இந்த நேரத்தில் கிருஷ்ணசாமியின் மகன் ஷ்யாம் ட்வீட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் போட்டுள்ள டிவிட்டில், NEET MBBS பொருத்த வரை ஒரு மாநிலத்தில் உள்ள 85% இடங்களுக்கு வேற மாநிலத்தை சார்ந்தவர்கள் போட்டி போட முடியாது.. போட்டி தமிழக மாணவர்களுக்குள் மட்டுமே என்ற அடிப்படை விசயம் கூட ஊடகவியலாளர்கள் உட்பட பலருக்கு தெரிவதில்லை.எத கேட்டாலும் அனிதானு வந்தராங்க.. என நக்கல் ட்வீட் போட்டுள்ளதை பலரும் அச்சில் பதிவேற்ற முடியாத வார்த்தைகளால் கழுவிக் கழுவி ஊத்துகின்றனர்.

ஷ்யாம் கிருஷ்ணசாமின்னு உன்னோட பெயர் சொல்லும் நீ யாருக்கு ஆதரவா பேசுவீங்க?  பாஸ் (நீங்களே ஒரு பேட் வேர்ட்ஸ் போட்டுக்கோங்க) CBSE வினாக்கள் கேட்கபடுவதால் தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு பிரச்சனை. என்ன போராட்டம் என்றே உனக்கு தெரியாது. நீயெல்லாம் பேச வந்துட்ட இல்ல?
 
ஆமாம் ? நீங்க எப்பிடி  டாக்டர் ஆனீங்க... காசுகுடுத்த ,மெரிட் ஆஹ்? இல்ல உங்க அப்பா அரசியல் பழக்கவழக்கத்தை வெச்சு தான டாக்டர் ஆனீங்க? நீங்கல்லாம் இதப்பத்தி பேசுற அளவுக்கு ஆயிப்போச்சி இல்ல?

மாநில ஒதுக்கீட்டில் சேர இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்தால் போதுமானது...  அது வாங்குவதற்கு வெறும் 500-1000 ருபாய் செலவழித்தால் கிடைத்துவிடும், பக்கத்து மாநிலத்துகாரர்கள் இதை செய்து இங்கு வந்து சேருகிறார்கள். அனைவருக்கும் தெரிந்த இந்த விஷயம் உனக்கும் தெரியும் தானே? நீ நீட் எழுதி டாக்டர் ஆகி இருந்தா சொல்ல உங்களுக்கு தகுதி உண்டு, உங்கள் குடும்பமே இட ஒதுக்கீடு மூலம் டாக்டர் ஆகிவிட்டு, யோகிய சிகாமணி மாதிரி பேசுறீங்க பாருங்க அதன் பொருத்துக்க முடியல, தனித் தொகுதியில் நிற்காமல் உன் அப்பாவால் MLA ஆகி இருக்க முடியுமா? உங்களுக்கு எல்லாம் மானமே இருக்காதா? என வெறித்தனமா திட்டித் தீர்க்கின்றனர்.