அப்படியே வன்னியர் நடத்திய போராட்டத்தை சாக்காக வைத்து கலைஞர் தன் சொந்த சாதிக்கு MBC பிச்சை குடுத்துக்கொண்டார் என புதியதமிழகம் கட்சியை சேர்ந்த ஷ்யாம் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். 

தாழ்த்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக காரணம் கருணாநிதி போட்ட பிச்சை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதற்காக அவர் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக்கேட்டார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி, ‘’ஆர்.எஸ்.பாரதிகள் ஒருபோதும் திராவிடம் BC-க்கோ, BC(M)-க்கோ, MBC-க்கோ இட ஒதுக்கீடு பிச்சை போட்டது என்று பேசுவதில்லை. திராவிடம் பிச்சை போடும் 'வள்ளல்' என்று‌ காட்டிக்கொள்ளவே 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்ற ஒரு கூட்டம் நிரந்தரமாக தேவைபடுகிறது.

அப்படியே வன்னியர் நடத்திய போராட்டத்தை சாக்காக வைத்து கலைஞர் தன் சொந்த சாதிக்கு MBC பிச்சை குடுத்துக்கொண்டதும், உங்க முதலியார் சாதி ஏழைகளுக்கும் சேர்த்து மோடி குடுத்த 10% EWS இட ஒதுக்கீடு பிச்சையை பற்றியும் எடுத்து சொல்லலாமே. இங்க பிச்சை வாங்கதவன் யாரு?! ஆர்.ஸ்.பாரதிகள் ஒருபோதும் திராவிடம் வன்னியருக்கோ மறவருக்கோ 27% இட ஒதுக்கீடு பிச்சை போட்டது என பேசுவதில்லை, முஸ்லிம்களுக்கு 3% பிச்சை போட்டது என்று பேசியதில்லை. திராவிடம் பிச்சை போடும் வள்ளல் என்று காட்டிக்கொள்ளவே ‘தாழ்த்தப்பட்டவர்’என்று கூட்டம் நிரந்தரமாக தேவைபடுகிறது’’என அவர் தெரிவித்துள்ளார்.