சென்னை புரசைவாக்கத்தில் அமமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசும்போது, “விரைவில் எப்படியும் உள்ளாட்சித் தேர்தல் வர இருக்கிறது. அதில் அம்மா முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றிபெற வேண்டும் என்று உங்களை கேட்டுக் கொள்ளத்தான் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன் என தெரிவித்தார்..

கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளைப் பற்றி பலரும் பேசினார்கள். பெரம்பூர் தொகுதியில் நம் வெற்றிவேலுக்கு வெறும் ஏழாயிரம் ஓட்டுகள்தான் கிடைக்குமா என்பது எல்லாருக்கும் வியப்பா இருக்கு.அதற்கான காரணம் உங்களுக்குத் தெரியும். காரணர் கிருஷ்ணர், அர்ஜுனர்தான் என அதிரடியாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் , அவதார புருஷர் கிருஷ்ணர் பற்றியோ, மகாபாரத மாவீரர் அர்ஜுனர் பற்றியோ பேசக் கூடாது. ஆனாலும் சிலர் பேச வைக்கிறார்கள். அந்த மகாபாரத்தில் எவ்வளவு சூழ்ச்சிகள் நடைபெற்றது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அமாவாசை அன்று துரியோதனனுக்கு டேட் கொடுத்துவிடுவார் சகாதேவன். அதுபோன்று எலக்ட்ரானிக் மெஷின்களில் நடந்த சூழ்ச்சிதான் நமது தோல்விக்குக் காரணம். இதெல்லாம் தெரிந்துதான் சில பேர் கிருஷ்ணர் - அர்ஜுனர்  குறித்துப் பேசுகிறார்கள் என குறிப்பிட்டார்.

கிருஷ்ணர் - அர்ஜுனர்  சூழ்ச்சிகள் இனியும் அந்த எடுபடாது. அதனால் தளர்ச்சி அடையாதீர்கள். நம்மிடம் இருந்த கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள்,முறையற்ற தொழில் செய்பவர்களை எல்லாம் அதிமுக அவர்கள் மேல் இருக்கும் வழக்குகளைக் காட்டி மிரட்டி இழுத்துவிட்டது. 

இப்போது நம்மிடம் இருப்பவர்கள் சுத்தமானவர்கள். ஒழுங்காக தொழில் செய்பவர்கள். இவர்களையும் இழுக்கலாம் என்று பணத்தாசை காட்டி இழுக்கப் பார்க்கிறார்கள் என தினகரன் அதிரடியாக தெரிவித்தார்..