Asianet News TamilAsianet News Tamil

இரும்புக் கோட்டையாக இருந்த கிருஷ்ணகிரியை சுக்குநூறாக நொறுக்கிய கொரோனா..!! தொற்று இரட்டை இலக்கமானது..!!

இந்நிலையில்  இன்று மூதாட்டியின் 20வயது பேரன் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த 40 வயது நபருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
 

krishnagiri district corona infection increasing
Author
Chennai, First Published May 8, 2020, 5:17 PM IST

தமிழகத்தில் ஒரே பசுமை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டம் அதிரடியாக ஆரஞ்சு மண்டலத்துக்கு மாறிய நிலையில் தற்போது அது சிவப்பு மண்டலத்திற்கு தாவும் சூழல் ஏற்பட்டுள்ளது  தமிழகத்தில்  எல்லா மாவட்டங்களிலும் கொரோனா சுற்றிச்சூழன்று அடித்து வந்த நிலையில் கொரோனா புயல் உள்ளே நுழைந்து விடாமல் கட்டிக்காக்கும் இரும்புக் கோட்டையாக இருந்து வந்தது கிருஷ்ணகிரி , இந்நிலையில் கடந்த வாரம் புட்டபர்த்தி கோயிலுக்கு சென்று திரும்பிய கிருஷ்ணகிரி மாவட்ட முதியவருக்கு சமீபத்தில் கொரோனா  உறுதி செய்யப்பட்டது , ஆனால்  அவர் சேலம்  சோதனைச்சாவடியில் தடுக்கப்பட்டு சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப் பட்டதால் அது கிருஷ்ணகிரி மாவட்ட கணக்கில் சேர்க்கப்படவில்லை, 

krishnagiri district corona infection increasing

இந்நிலையில் சூளகிரி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த 60 வயது மற்றும் 67 வயதுள்ள இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்தது ,  இவர்கள் இருவரும் பெங்களூர் சென்று திரும்பிய நிலையில் அவர்களுக்கு அறிகுறியே இல்லாமல் வைரஸ் தொற்று உறுதியானது இந்நிலையில்  இந்த 2 பெண்களும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதால் பச்சை மண்டலம் என்ற அந்தஸ்தை இழந்து ஆரஞ்சு மன்றத்திற்கு தள்ளப்பட்டது கிருஷ்ணகிரி ,  மேலும் மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று திரும்பிய ஒருவருக்கும் சிவகங்கை மாவட்டத்திற்கு சென்று வந்த இருவருக்கும்  ஓசூர் அடுத்த மத்திகிரி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற போது இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக இருந்த நிலையில் சூளகிரி பகுதியில் பாதிக்கப்பட்ட 67 வயது மூதாட்டியின் 12 வயது பேத்தி உள்பட அவர்கள் குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா நேற்று உறுதி செய்யப்பட்டது. 

krishnagiri district corona infection increasing

இந்நிலையில் இன்று மூதாட்டியின் 20வயது பேரன் மற்றும் பக்கத்து வீட்டை சேர்ந்த 40 வயது நபருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இருப்பினும் 10 பேருக்கும் எந்த வித அறிகுறியோ, பாதிப்போ தென்படவில்லை . இதனால் சூளகிரி மற்றும் மத்திகிரி பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதிகளாக  அறிவித்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. சூளகிரியில் பாதிக்கப்பட்டவர்கள் வீடு மார்க்கெட் அருகிலேயே உள்ளதால் , கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்த விவசாயிகள் மூலம் தான் பரவி உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக  மருத்துவ வட்டாரத்தில் பேசப்பட்டுகிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios