Asianet News TamilAsianet News Tamil

திமுக முன்னாள் எம்.பி. கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கம்... ஜெயலலிதா பாணியில் மு.க.ஸ்டாலின் அதிரடி..!

கே.பி. ராமலிங்கத்திடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஆகையால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.பி.ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.

kp ramalingam dismissed...mk stalin action
Author
Tamil Nadu, First Published Apr 12, 2020, 11:07 AM IST

கட்சி தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் திமுகவிலிருந்து முன்னாள் எம்.பி. கே.பி. ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்ட கே.பி.ராமலிங்கம், அனைத்துக்கட்சி கூட்டம் தேவையில்லாதது என்றும், 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தக் கூடாது என்றும் கூறியிருந்தார். மேலும், கொரோனா' வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற, பிரதமரும், முதல்வரும் சிறப்பாக செயல்படுகின்றனர் என்றார். 

kp ramalingam dismissed...mk stalin action

இதனையடுத்து, அவரது அறிக்கை கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர், விவசாய அணி மாநில செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில், திமுக அடிப்படை உறுப்பி னர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாக கூறியிருந்தார். 

kp ramalingam dismissed...mk stalin action

இந்நிலையில், கே.பி. ராமலிங்கத்திடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஆகையால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கே.பி.ராமலிங்கம் நிரந்தரமாக நீக்கப்பட்டதாகவும், இதற்கான உத்தரவை கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாக அக்கட்சி பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios