Asianet News TamilAsianet News Tamil

வெறும் 13 வாக்குகள் வித்தியாசத்தில் கடம்பூர் ராஜு முன்னிலை.. மாறி, மாறி ஏறி இறங்கும் டி.டி.வி. தினகரன்..!

ஸ்டார் அந்தஸ்து பெற்ற கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கும், அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூவுக்கும் மாறி மாறி முன்னிலை பெற்று வருவதால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

Kovilpatti constituency...kadambur raju leading
Author
Thoothukudi, First Published May 2, 2021, 12:29 PM IST

ஸ்டார் அந்தஸ்து பெற்ற கோவில்பட்டி தொகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கும், அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூவுக்கும் மாறி மாறி முன்னிலை பெற்று வருவதால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிட்டார். அமமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கதிரவன், நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி ஆகியோர் போட்டியிட்டனர்.

Kovilpatti constituency...kadambur raju leading

இந்நிலையில்,  டிடிவி.தினகரன் போட்டியிடுவதால் ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே டிடிவி தினகரனும், கடம்பூர் ராஜூ மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். தற்போதைய நிலவரப்படி கடம்பூர் ராஜூ 13,728 வாக்குகளும், டிடிவி.தினகரன் 13,709 வாக்குகளும் பெற்றுள்ளனர். வெறும் 13 வாக்குகள் வித்தியாசத்தில் கடம்பூர் ராஜூ முன்னிலையில் இருந்து வருகிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios