தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு...!! திமுக சமூக நீதி முகத்திரை கிழிந்தது..
கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தயாநிதிமாறன் பேசிய பேச்சை கண்டிக்காமல் மறைத்துவிட்டு தலைமைச் செயலாளர் சண்முகத்தை மட்டுமே கண்டித்து அறிக்கை விட்டிருப்பது உண்மையை மூடி மறைக்க நினைப்பது போல உள்ளது.
தலித் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது கோவை பி 3 காவல் நிலையத்தில் வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்க பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை சிஎம்சி காலனி வெரைட்டி ஹால் ரோடு பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன்(22) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மாறன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன் டி. ஆர் பாலு ஆகியோர் திமுவின் " ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் " பெறப்பட்ட மனுக்களை தலைமைச் செயலாளரை சந்தித்து வழங்கினார் , இந்த மனுக்களை கொடுத்து விட்டு வெளியே வந்த அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர் , அப்போது அங்கு பேசிய தயாநிதி மாறன் தலைமைச் செயலாளர் எங்களை மூன்றாம் தர மக்கள் போல் நடத்தினார் . நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட ஆட்களா எனக்கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். தயாநிதி மாறனின் இந்த பேச்சு உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற சாதி வெறி எண்ணம் அவரது ஆழ் மனதில் ஊன்றியிருப்பதையே இது காட்டுவதாக பலரும் கருதுகின்றனர் இது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்பினர் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கோவை சிஎம்சி காலனி பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் காவல்நிலையத்தில் தயாநிதிமாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கொடுத்த புகார் கொடுத்திருந்தார் அதன் முழு விவரம் வருமாறு :-
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தயாநிதிமாறன் எம்பி அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்களை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார் அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் மனு அளிக்கிறேன்... நான் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்து உள்ளேன் , நான் ஒரு இந்து அருந்ததியர் வகுப்பைச் சார்ந்தவன் ஆவேன் . கடந்த புதன்கிழமை 13-5-2020 தேதியன்று தலைமைச் செயலகத்தில் திமுக எம்பிக்கள் தயாநிதிமாறன் டி.ஆர் பாலு கலாநிதி வீராசாமி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தலைமைச் செயலாளர் திரு.சண்முகம் ஐஏஎஸ் அவர்களை சந்தித்து கொரோனா தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனைகள் அடங்கிய மனுக்களை அளிக்க சென்றுள்ளனர் . அப்போது தலைமைச் செயலாளர் தங்களை மதிக்கவில்லை என குற்றம் சுமத்தி செய்தியாளரிடம் நீண்டதொரு விளக்கத்தை திரு டி.ஆர் பாலு எம்பி மற்றும் தயாநிதி மாறன் எம்.பி என இருவரும் சேர்ந்து ஆவேசமாக பேட்டி கொடுத்ததை நான் எனது வீட்டில் உள்ள தொலைக்காட்சி வாயிலாக 13-5-2020 தேதி பிற்பகல் 2.7 மணிக்கு பார்த்தேன் அந்த சந்திப்பின்போது தயாநிதிமாறன் எம். பி அவர்கள் , எதற்கும் தொடர்பே இல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களை உதாரணப்படுத்தி நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களை போல மூன்றாம் தர குடிமக்களாக என பேசியது தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும் அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
இப்படி தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களை கேவலப்படுத்தி பேசிவரும் திமுகவின் உயர்மட்ட நிர்வாகிகளின் சாதிவெறி போக்கை தடுக்க வேண்டும். ஏற்கனவே திமுகவில் தலைமை நிலைய செயலாளர் ஆர்.எஸ் பாரதி தாழ்த்தப்பட்டவர்கள் உயர் நீதிமன்ற நீதிபதியாக வந்ததற்கு காரணம் திமுக போட்ட பிச்சைதான் என பேசியதற்கு பல இடங்களில் எஸ்சி-எஸ்டி பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . இந்நிலையில் தயாநிதிமாறன் எம்பியும் இப்படி பேசியிருப்பது தாழ்த்தப்பட்ட மக்கள் மீது திமுகவினர் கொண்டிருக்கும் வெறுப்பையே காட்டுகிறது . தாழ்த்தப்பட்ட மக்களின் பாதுகாவலர்கள் நாங்கள்தான் என மூச்சுக்கு முன்னூறு தடவை மார்தட்டி பேசிவந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் பேரனும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க ஸ்டாலின் அவர்களின் மறு மகனுமான திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் அவர்களே இப்படி பேசி இருக்கும்போது , கிராமப்புறத்தில் அன்றாடம் சாதி சகதியிலேயே புரண்டு எழும் இவர்களுக்கு கீழ் உள்ள மாவட்ட , ஒன்றிய , பேரூர் கிளை கழக , நிர்வாகிகளின் மனநிலையை என்னவென்று சொல்வது . தாழ்த்தப்பட்ட மக்களை கேவலப்படுத்தி பேசிய தயாநிதி மாறனின் சாதி புத்தியை கண்டிக்க வேண்டிய ஊடகங்கள் இவர் உளறி கொட்டி விட்டார் என சப்பைக்கட்டு கட்டுவதும் , வைகோ, கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் , போன்ற கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தயாநிதிமாறன் பேசிய பேச்சை கண்டிக்காமல் மறைத்துவிட்டு தலைமைச் செயலாளர் சண்முகத்தை மட்டுமே கண்டித்து அறிக்கை விட்டிருப்பது உண்மையை மூடி மறைக்க நினைப்பது போல உள்ளது.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயர் அந்தஸ்தை வழங்கிய தாழ்த்தப்பட்ட தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் ஆர்.எஸ் பாரதி மீதும் தயாநிதி மாறன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் . எனவே இதுபோன்ற செயல்களில் இனியும் ஈடுபடாமல் தடுக்கவும் இனிவரும் காலங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை இழிவாக பேசாமல் இருக்கவும் தயாநிதி மாறன் எம்.பி அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலைய சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் இந்த புகார் மனு மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.