Asianet News TamilAsianet News Tamil

கொங்கு எங்கள் கோட்டை... ஸ்டாலினுக்கு எதிராக நடந்த சம்பவம்... அதே மேடையில் வானதி சீனிவாசன்..!

CM Stalin | அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை சென்றுள்ள நிலையில், ட்விட்டரில், #GoBackStalin என்கிற ஹேஷ்டேக்கை எதிர்கட்சியினர் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

Kongu is our fort ... The incident against Stalin ... Vanathi Srinivasan on the same platform ..!
Author
Tamilnadu, First Published Nov 22, 2021, 1:33 PM IST

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை சென்றுள்ள நிலையில், ட்விட்டரில், #GoBackStalin என்கிற ஹேஷ்டேக்கை எதிர்கட்சியினர் இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். Kongu is our fort ... The incident against Stalin ... Vanathi Srinivasan on the same platform ..!

தமிழகத்திற்கு பிதமர் மோடி வருகை தரும்போதெல்லாம் #Gobackmodi என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி திமுக அனுதாபிகள் ட்ரெண்டாக்கி பலூன் விட்டு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். ஒரு பிரதமருக்கே இவ்வளவு எதிப்பா? என பலரும் முகம் சுழிப்பது நடந்தது. Kongu is our fort ... The incident against Stalin ... Vanathi Srinivasan on the same platform ..!

இந்நிலையில், தமிழக முதல்வரான பின், மு.க.ஸ்டாலின் கோவைக்கு செல்லும் போதெல்லாம் தொடர்ந்து ட்விட்டரில் #GoBackStalin ட்ரெண்ட் ஆவது வழக்கமாகி விட்டது. 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் தி.மு.க படுதோல்வியை தழுவியது.2001-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதலே தி.மு.க தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் குறிப்பாக கோவையில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. 


அப்போதிலிருந்து கொங்கு மண்டலத்தை திமுக புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அடுத்து கோவையை திமுக கோட்டையாக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜியை அங்கு களப்பணிக்கு அனுப்பினார் மு.க.ஸ்டாலின். அடுத்து மக்கள் நீதி மைய்யத்தில் இருந்து விலகிச் சென்ற தொழிலதிபர் மகேந்திரனை திமுகவுக்கு அழைத்து வந்தனர். 

 

ஆனாலும், கொங்கு மண்டலம் அதிமுக- பாஜகவுக்கே ஆதரவு தெரிவித்து வருகிறது. அதன் வெளிப்பாடாக இன்று கோவை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக #GoBackStalin என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளாவில் ட்ரெண்டாகி வருகிறது.  ஆனாலும் கோவையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் மேடையில் அமர வைக்கப்பட்டார். அவரை முக.ஸ்டாலின் அழைத்து அமர வைத்தார். இது இரு கட்சியினரிடையும் சமரசத்தை ஏற்படுத்தும் முயற்சியாக கருதப்படுகிறது. 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios