மேற்கு வங்கத்தில் செயல்பட்டுவந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் மக்களிடம் வசூலித்து ரூ.2500 கோடி மோசடியில் ஈடுபட்டது. இதை அப்போது கொல்கத்தா போலீஸ் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை நியமித்தார் முதல்வர் மம்தா பானர்ஜி. முறையாக விசாரணை நடக்கவில்லை எனக்கூறி வழக்கை கடந்த 2014-ம ஆண்டு சிபிஐக்க மாற்றியது உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கில் ஆதாரங்களை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், பல ஆவணங்களைத் தரவில்லை, முறையாக ஒப்படைக்கவில்லை என போலீஸ் ஆணையராக அப்போது இருந்த ராஜீவ் குமார் மீது சிபிஐ குற்றம் சாட்டியது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் மூலம் ாாஜீவ்குமார் தன்னை கைது செய்யத் தடை ஆணைப் பெற்றார். அதன்பின் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவுபெற்றார். ஆனால், பலமுறை தடையை நீட்டித்த நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தடையை நீட்டிக்கவில்லை, சிபிஐ கைது செய்யலாம் என்றது.

அதன்பின் விசாரணைக்கு ராஜீவ் குமாரை அழைத்து 3 முறை சிபிஐ நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ராஜீவ் குமார் எங்கு இருக்கிறார் எனத் தெரியவில்லை. இதையடுத்து, நாளை நேரில் ஆஜராகக்கோரி இன்று சம்மன் அனுப்பியது சிபிஐ.

இதற்கிடைய கொல்கத்தா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த சிபிஐ, பலமுறை சம்மன் அனுப்பியும் ராஜீவ்குமார் ஆஜராகவில்லை. அவரைக் கைது செய்ய வாரண்ட் அளிக்கவேண்டும் என்று மனுத்தாக்கல் செய்துள்ளது.

இந்த சூழலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாட்கள் பயணமாக நேற்றுமுன்தினம் டெல்லி புறப்பட்டார். டெல்லி செல்லும் முன் கொல்கத்தா விமானநிலையத்தில் பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென்னைச் சந்தித்த மம்தா அவருக்கு வாழ்த்துத் தெரிவித்து புடவை பரிசாக அளித்தார்.

டெல்லியில் நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். இந்த சந்திப்பின் போது மாநிலத்தின் வளர்சிக்காக நிதியுதவி கோரியும், மாநிலத்தன் பெயரை மாற்றும் தீர்மானத்துக்கு அனுமதிக்கக்கோரியும், என்ஆர்சி பட்டிலில் ஏராளமான கொல்கத்தா இந்துக்கள் விடுபட்டு இருப்பது குறித்தும் பேசியதாக மம்தா தெரிவித்தார்

பிரதமர் மோடியை நேற்று சந்தித்த நிலையில் இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இன்று மம்தா சந்தித்துப் பேசினார். அப்போது அசாம் மாநிலத்தில் ஏராளமான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இந்துக்கள், கூர்காக்கள் தேசிய குடியுரிமை பதிவேடு பட்டியலில் விடுபட்டு இருப்பது குறித்து பரிசீலிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தியதாக மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

ஆனால் மேற்கு வங்க அரசியல் வட்டாரத்தில் மம்தா பானர்ஜி திடீரென ஏன் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க வேண்டிய அவசியம் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் கேட்கின்றனர்.

சாரதா சிட்பண்ட் வழக்கில் தொடர்புடையவருமான முன்னாள் கொல்கத்தா போலீஸ் ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜாராமல் தலைமறைவாக இருந்து வருகிறார், அவர் மீது நடவடிக்கை ஏதும் பாயாமல் இருக்க பிரதமர் மோடி, அமித் ஷாவுடன் மம்தா பானர்ஜி பேசி இருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது