கோடநாடு விவகாரத்தில் தன் மீது குற்றம் இல்லை என்பதை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலிலும், நெருப்பிலும் கூட இறங்குவார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவின் கோடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளைகள் பின் அதைத் தொடந்து நிகழ்ந்த 3 விபத்து மரணங்கள் மற்றும் ஒரு தற்கொலை ஆகியவற்றில் தமிழக முதல்வரான எடப்பாடியாரின் பெயரை இழுத்துவிட்டு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முதல்வர் தரப்பில் இருந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் கோடநாடு விவகாரத்தில் தன்னை நிரூபிக்க முதல்வர் பழனிச்சாமி கடலிலும், நெருப்பிலும் இறங்குவார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஆதரவு இல்லாமல் மத்தியில் எந்த கட்சியும் ஆட்சியமைக்க முடியாது. பிரதமர் மோடி ஆட்சியில் நிறையும், குறையும் இருக்கிறது. ஆனால் அவர் மீது இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.