kn nehru controversial speech in neet protest

திமுக ஆட்சியில் இருந்திருந்தால், நீட் தேர்வுக்கு விலக்கு பெறமுடியாவிட்டால், மாணவர்களை காப்பி அடிக்க அனுமதித்திருபோம் என முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வெளிப்படையாக பேசியுள்ளார்.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தேசிய அளவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளதோடு விலக்கு அளிக்க முடியாது என வெளிப்படையாக தெரிவித்தும் விட்டது.

இதையடுத்து கடந்த முறையை போல தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மாணவர்களுக்கு அரசு சார்பில் நீட் தேர்விற்கு பயிற்சியளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றே தீர வேண்டும் என திமுக வலியுறுத்திவருகிறது. இந்நிலையில், திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, இதே திமுக ஆட்சியாக இருந்திருந்தால், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றிருப்போம். முடியவில்லை என்றால் மாணவர்களை காப்பி அடிக்க அனுமதித்திருப்போம். பீகார், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் மாணவர்கள் காப்பி அடித்து தேர்வாகின்றனர். தமிழர்கள் மட்டும் ஏன் உத்தமசீலர்களாக இருக்க வேண்டும்? என கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.