ராசாத்தி அம்மாளின் கோட்டாவில், அரசியல்வாதியாகி, இப்போது உதயநிதிக்கும் அவரது மகன் இன்பநிதிக்கும் டையப்பர் வாங்கி கொடுத்து, மகேஷ் அன்பில்பொய்யாமொழிக்கு கீழ் அரசியல் நடத்தி வருகிற கே.என் நேரு, கொங்கு சீமையின் செல்லப் பிள்ளையாக, கோவை மக்களின் தேவை நாயகனாக, உள்ளாட்சித் துறைக்கு 123 தேசிய விருதுகளை வென்று வந்த தொண்டாமுத்தூர் பெற்று தந்த தூயவராக, தான் ஏற்ற இயக்கத்திற்கும், தமக்கு வாக்களித்த மக்களுக்கும் குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சிக்கு அருந்தொண்டு ஆற்றிவரும் எங்களின் உள்ளாட்சித் துறை அமைச்சர் குறித்து விமர்சிக்கும் யோக்கியதை உங்களுக்கும் கிடையாது, ஸ்டாலினுக்கும் கிடையாது.என வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..." 400 கோடி செலவில் டியுஷன் வாத்தியார் வைத்திருக்கும் உலக அறிவாளி ஸ்டாலின், உள்ளாட்சித்துறை அமைச்சர், தன் மீது ஸ்டாலின் சொல்லும் குற்றச்சாட்டுகளை அவர் நிரூபிக்க தயாரா, அப்படி முடியாது போனால் திமுக தலைவர் பதவி உட்பட அனைத்துப் பதவிகளையும் ராஜினாமா செய்து ஆண்டாண்டு காலமாக கட்சிக்கு உழைத்த மூத்த தலைவர்களிடம் தன் தலைமை பதவியை ஒப்படைப்பாரா? என்று அண்ணன் வேலுமணி விடுத்த சவாலுக்கு உரிய பதில் சொல்ல துப்பில்லாத ஸ்டாலின், தனது அல்லக்கை நேருவை விட்டு தரந்தாழ்ந்த விதத்தில் அறிக்கை வெளியிட வைத்திருக்கிறார்.

அதில் வெட்கம், மானம் இருக்கிறதா? என்றும், கூமூட்டை என்றும், இழிவான பேர்வழி என்றும் கே.என்.நேரு தன் கட்சித் தலைமைக்குப் பொருத்தமான வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்தி இருக்கிறார். முதல் தளத்தில், தன் தாயையும் தங்கையும் சிபிஐ விசாரணை செய்து கொண்டிருந்த போது, தரை தளத்தில் இதனை விசாரிக்க உத்தரவிட்ட கட்சியோடு பேச்சு வார்த்தை நடத்திய பேக்கரி ஸ்டாலினை தலைவராக வைத்துக் கொண்டு, நேரு வெட்கம் மானம் குறித்து பேசலாமா ?

அதுபோலவே, 89ம் 6ம் = 97 என்று புரட்சிக்கர கணக்கு போடும் கணித மேதை ஸ்டாலினை தலைவராக வைத்துக் கொண்டு, அனிதாவிற்கும், சரிதாவிற்கும் வேறுபாடு தெரியாமலும், சுதந்திர தினம், குடியரசு தினம் எந்த நாளில் என்பதைக் கூட தெரியாத மேதாவி ஸ்டாலினுக்கு, கை கால் பிடித்துவிடும் நேரு, பிறரை 'கூ' முட்டை என்று சொல்வதற்கு அருகதை இருக்கிறதா என்பதை யோசித்துப் பார்க்கட்டும்.

முதலமைச்சரின் மகன் என்பதை பயன்படுத்திக் கொண்டு, எழுபதுகளிலேயே கூர்காவை தாக்கி விட்டு, காவல் நிலையத்திற்கு பிடித்துச் செல்லப்பட்டதோடு, கல்லூரி செல்லும் பெண்களிடம் பாலியில் சீண்டல்களில் ஈடுபட்ட மலிவான பேர்வழி, மானம் கெட்ட கழிச்சடை யார் என்பதும், மதுரைக்கு வந்த இந்திரா காந்தியை குண்டர்களை வைத்து மண்டையை பிளந்துவிட்டு, இந்திரா காந்திக்கு விதவை நிவாரணம் வேண்டுமென்றால் எங்களிடம் வந்து வாங்கிக் கொள்ளலாம் என்று வாய் நீளம் காட்டி, நல்ல வாயை கோணவாயாய் ஆக்கிக் கொண்ட மலிவான பேர்வழி யார் என்பதும் மக்களுக்குத் தெரியும்.

எனவே, உத்தரவு போட்ட எஜமானுக்காக, வெறிபிடித்து குரைத்திருக்கும் கே.என்.நேரு தரந்தாழ்ந்த அறிக்கைகளை விடுவது நிறுத்திக் கொள்ள வேண்டும். திருச்சியில் உள்ள உச்சி பிள்ளையாரே அச்சப்படும் அளவிற்கு, தில்லை நகர் தொடங்கி ஒட்டுமொத்த சோழ நாட்டையும், ஊழல் பணத்தால் வளைத்துவிட்டு, இப்போது உச்ச நீதிமன்றத்தில் தலை தப்புமா? என தவம் கிடக்கும் ஊழல் பேர்வழி நேருவிற்கு பூவாளூர் அரிசி அலை தொடங்கி, சென்னை, கோவை என தமிழகம் கடந்து இந்தியா முழுவதும் குவிந்து கிடக்கும் சொத்துக்கள் வந்த கதையெல்லாம் உலகமே அறியும்.

 ராசாத்தி அம்மாளின் கோட்டாவில், அரசியல்வாதியாகி, இப்போது உதயநிதிக்கும் அவரது மகன் இன்பநிதிக்கும் டையப்பர் வாங்கி கொடுத்து, மகேஷ் அன்பில்பொய்யாமொழிக்கு கீழ் அரசியல் நடத்தி வருகிற கே.என் நேரு, கொங்கு சீமையின் செல்லப் பிள்ளையாக, கோவை மக்களின் தேவை நாயகனாக, உள்ளாட்சித் துறைக்கு 123 தேசிய விருதுகளை வென்று வந்த தொண்டாமுத்தூர் பெற்று தந்த தூயவராக, தான் ஏற்ற இயக்கத்திற்கும், தமக்கு வாக்களித்த மக்களுக்கும் குறிப்பாக தமிழகத்தின் வளர்ச்சிக்கு அருந்தொண்டு ஆற்றிவரும் எங்களின் உள்ளாட்சித் துறை அமைச்சர் குறித்து விமர்சிக்கும் யோக்கியதை உங்களுக்கும் கிடையாது, ஸ்டாலினுக்கும் கிடையாது.

வேண்டுமானால், இதே உள்ளாட்சித் துறையை அப்பனின் அதிகாரத்தை உறிஞ்சி பிழைத்த ஒட்டுண்ணி ஸ்டாலின் அத்துறை குறித்தும், அவரது ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறைக்கு அவர் ஆற்றிய சாதனைகள் குறித்தும் எங்கள் அண்ணன் வேலுமணியோடு துண்டு சீட்டு துணையில்லாமல் விவாதிக்கும் தைரியம் இருக்கிறதா?

மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்துகின்ற ஸ்மார்ட்சிட்டி எனப்படும் பிரமாண்ட நகர் வளர்ச்சித் திட்டத்திற்கு அனுபவமும், அர்ப்பணிப்பும் கொண்ட ஒருவரை பதவி நீட்டிப்பும், பதவி உயர்வும் கொடுத்து பயன்படுத்திக் கொள்வதும், உயரிய உழைப்பை நல்குகிற ஒரு அரசுப் பணியாளரை ஊக்குவிப்பதும், தேசவிரோதமல்ல. அதே வேளையில், 2009ம் ஆண்டு திமுக ஆட்சி நிறைவை நெருங்கி கொண்டிருந்த வேளையில், பணி ஓய்வு பெற்ற பல நூறு பேருக்கு மறு நியமனம் செய்து, அவர்களை தங்களின் தேர்தல் தில்லுமுல்லுகளுக்கு பயன்படுத்த திமுக மேற்கொண்ட குள்ளநரித்தனத்தை கண்டித்து, அன்று அறிக்கை வெளியிட்டவர் எங்கள் புரட்சித் தலைவி அம்மாஅவர்கள்.

புகழேந்தி கட்டுமானத் துறை பட்டப்படிப்பு படித்தவரா? அவர் மெக்கானில் இன்ஜினியர் தானே படித்திருக்கிறார், அவர் எப்படி சிவில் வேலைகள் நிறைந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பயன்படுவார் என்று அரிசி வியாபாரி நேரு அதிமேதாவியாக கேள்வி எழுப்பி இருக்கிறார். நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்று புத்தகம் எழுதுவதற்கு, நூறாண்டுகள் வாழ்ந்தவர் தான் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. கல்வி என்பதற்கும், அறிவாற்றல் என்பதற்கும் சம்பந்தம் இல்லை. அப்படிப் பார்த்தால் தென்னாட்டு காந்தி, இந்நாட்டு பெர்னாட்ஷா என்று போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா துவங்கிய திமுகவை இன்று ஸ்டாலின் வழிநடத்துவதற்கு அருகதை இருக்கிறதா ?

இந்நாட்டு அரசியலை, தென்னாட்டுப் பக்கம் திருப்பி காட்டிய தேவதையாம் புரட்சித் தலைவி அம்மாவின் மறைவிற்கு பிறகு இனி அதிமுக அவ்வளவுதான், இனி ஆளில்லா அரசியல் மைதானத்தில் கோல் போட்டு விளையாடலாம் என கணா கண்ட ஸ்டாலினின் எண்ணங்களையெல்லாம், தவிடு பொடியாக்கிய மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் மற்றும் துணை முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் ஆகியோருக்கு உறுதுணையாக இருந்து பெரும் பங்காற்றியதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கும், மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணிக்கும் பெரும்பங்கு உண்டு என்பதை நினைக்கிற போதெல்லாம் கையாலாகாத ஸ்டாலினுக்கு கடுப்பு இடுப்புக்கு மேலே பொங்குகிறது.

அதனால் தான் தொடர்ந்து வன்மத்தோடு தங்கமணி, வேலுமணி என்று தூக்கத்திலும், திருவாளர் துண்டு சீட்டு புலம்புகிறார். அதிலும் குறிப்பாக மாற்று மணல் திட்டம், பிளாஸ்டிக் ஒழிப்பு, ஸ்டாலின் புரியாமல் அறியாமல் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வந்த மீத்தேன் ஒழிப்பு, மின்மிகை மாநிலமாக தமிழகம் ஜொலிப்பு, பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக படுகை விவசாயப் பகுதி அறிவிப்பு, அத்திக்கடவு அவிநாசித் திட்டம், மருத்துவக் கல்லூரிகள் 12க்கு ஒரே மாதத்தில் ஒப்புதல், மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, வருண பகவானை வாழ்த்தி வரவேற்கும் வகையில், கரிகாலன் காலத்தை கண்முன்னே நிறுத்தும் குடிமராமத்துப் பணிகள், பொங்கல் சீர் நூறினை ஆயிரமாய் உயர்த்தித் தந்தது என்றெல்லாம் எளிமை சாமானியர் எடப்பாடியார் நிகழ்த்தி வரும் சரித்தர சாதனைகள் 2021ம் ஆண்டிலும் மூன்றாவது முறையாக கழகத்தை முடிச்சூட வைப்பது சத்தியம் என்பது மு.க.ஸ்டானிக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்ட காரணத்தால், உதறல் எடுத்து உளறுகிறார்.

அதிலும் குறிப்பாக, கொள்ளை நோய் கொரோனாவிற்கு எதிராக அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் எடப்பாடியாரின் அரசு, கொரோனாவின் மூர்க்க பரவலுக்கு, விரைவில் முடிவுகட்டி விடப்படும் என்பதாலும், அதற்கான முன்னோட்டமாக, தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் குறைய தொடங்கி இருப்பதும், இது வெள்ளந்தி தலைவனாம் விவசாயின் வீட்டில் உதித்த விடிவெள்ளியாம், உழவன் வீட்டில் உதித்த ஒப்பில்லா முதல்வராம் எங்கள் முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியாருக்கு மக்களிடையே நல் அபிப்பிராயத்தை உருவாக்கி வருகிறது என்பதை காணப் பொருக்காத ஸ்டாலின், அதனை குலைப்பதற்கு அறிக்கை என்னும் பேரிலே அரசியல் அருவருப்பை செய்து வருகிறார். மக்களையும், தெய்வத்தையும் நம்பி, தன் கரங்களில் ஏந்தியிருக்கும் அதிகார செங்கோலை, ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் ஏணியாக மாற்றியிருப்பவர் எங்கள் அண்ணன் எடப்பாடியார்.எப்பொழுதெல்லாம் மக்கள் ஆதரவை அரும்பாடுபட்டு இந்த அரசு பெறுகிறதோ, அப்போதெல்லாம் அதை திசை திருப்ப திடீர் அவதூறுகளை அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் அள்ளி வீசி அரசியல் செய்யும் மலிவான வித்தையை ஸ்டாலின் கடைபிடித்து வருவதை அனைவரும் உற்று கவனித்து வருகின்றனர்.

நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் வெற்று அறிக்கைகளை விடுத்து தன்னுடைய இருப்பை காட்டிக்கொள்ள முயன்று தோற்றுப்போய், இறுதியாக இரவல் அறிவுரைகளை பெற்று சதித் திட்டம் தீட்டுகிற நீங்கள், பேரிடர் பல கண்டு துவளாத, வந்தவர்களை வாழவைத்த பெருமைமிகு தலைநகர் சென்னையை, இனி வாழவே தகுதியில்லாத நோய் தொற்று நகரம், நரகம் என்றெல்லாம் மக்களை பீதியடைச் செய்து, சென்னையை விட்டு வெளியேற தூண்டிவிட்டு, தமிழகமெங்கும் நோய்தொற்று பரவ காரணமாகி தற்போது தமிழக மக்களை, மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் சீரிய முயற்சியால், உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை, வருவாய்த் துறைகளை ஒருங்கிணைத்து திட்டமிட்ட பணிகளால் சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மாண்புமிகு அம்மாவின் அரசிற்கு நற்பெயர் கிடைப்பதை பொறுக்க முடியாமல், இதே போன்று மக்களிடமிருந்து அரசு நற்பெயர் எடுக்கும் போதெல்லாம், மக்களை திசை திருப்ப ஆதாரமற்ற குழப்ப அறிக்கைகள் வெளியிடுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

கொரோனா காலத்தில் சேவல் கூவுகிறதோ இல்லையோ கொரோனாவை மையப்படுத்தி ஏதாவது வெட்டி அறிக்கையை வெளியிட்டு காலை முதல் மாலை வரை பித்து பிடித்தவர் போல பிதற்றுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் உங்களது தலைவர் ஸ்டாலின்.

திருவாரூரிலிருந்து இரயில் டிக்கெட் எடுக்கக் கூட நாதியின்றி, திருட்டு இரயில் ஏறி சென்னை வந்த மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர், உலக பணக்காரர்கள் வரிசைப் பட்டியலில் முன்னிலை இடம் பிடித்தது எப்படி ? தற்போது அநாகரிக அரசியல் நடத்தும் உங்கள் தலைவர், விவசாயத் தொழிலிலோ அல்லது வேறு ஏதேனும் தொழில் செய்தா இலட்சக் கணக்கான கோடிகளை ஈட்டினார்கள்?

பொது வாழ்விற்கு வந்து இன்று உலகப் பணக்காரர்களோடு போட்டி போடும் அளவிற்கு, இத்தனை கோடிகளும் குவித்தது எப்படி? நீங்களோ, உங்கள் தலைவரோ விளக்குவீர்களா? நாங்கள் எளிய மக்களுக்காக பயன்படுகிற கீரைத் தோட்டம், திமுக தலைவர் ஸ்டாலினோ, ரகசிய சிகிச்சைக்கு லண்டனும், சிகை அலங்காரம் செய்து கொள்ள தாய்லாந்துக்கும் பறக்கிற ஏழைக்களுக்கு மட்டுமல்ல எதற்கும் பயன்படாத குரோட்டன்ஸ் செடியே. இதனை, போக்குவரத்து துறையே கொள்ளையடித்து, அதனை காய்லாங்கடையாக மாற்றிய கே.என்.நேரு உணர்ந்து கொள்வது உத்தமம்.