Asianet News TamilAsianet News Tamil

மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும்.. மு.கஸ்டாலின் அறிவிப்புக்கு பாராட்டு..!

அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் இராஜராஜனின் ஐப்பசி சதயத்தை அரசு விழாவாக அறிவித்தார். இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இராஜேந்திரனின் ஆடித் திருவாதிரையை அரசு விழாவாக அறிவித்திருக்கிறார் எனப் பாராட்டி வருகின்றனர்.

King Rajendra Cholan's birthday will be celebrated as a state festival .. Praise for M.Kastalin's announcement ..!
Author
Tamil Nadu, First Published Aug 11, 2021, 12:37 PM IST

மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரை தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும்  என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும். அண்மையில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ (UNESCO) உலகப் புராதன பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது. King Rajendra Cholan's birthday will be celebrated as a state festival .. Praise for M.Kastalin's announcement ..!

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவினை சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டுள்ளார்.

King Rajendra Cholan's birthday will be celebrated as a state festival .. Praise for M.Kastalin's announcement ..!

மேலும் தற்பொழுது நிலவி வரும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக, வரும் ஆண்டு முதல் இந்த விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கபப்ட்டுள்ளது. இதற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். அன்றைய முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் இராஜராஜனின் ஐப்பசி சதயத்தை அரசு விழாவாக அறிவித்தார். இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் இராஜேந்திரனின் ஆடித் திருவாதிரையை அரசு விழாவாக அறிவித்திருக்கிறார் எனப் பாராட்டி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios