மரண கலாய் கலாய்த்த தேர்தல் ஆணையம்... முருகதாஸால் அசிங்கப்பட்டு நிற்கும் விஜய்...!!

தேர்தல் கமிஷன்!... என்கிற அமைப்புக்கு ஆகப்பெரிய கெத்து இருக்கிறது! என்றும் உண்மையை இந்தியா அறிய செய்தவர்  டி.என்.சேஷன். அவர் அமைத்துக் கொடுத்த ராஜபாட்டையில் சில தேர்தல் ஆணையர்கள் அவ்வப்போது தெறிக்கவிட்டு வருகிறார்கள். இது தேர்தல் காலம் என்பதால் இந்த அதிகாரிகள் மீது தாமாக லைம்லைட் விழத்துவங்குகிறது.

kindal Election Commission...

தேர்தல் கமிஷன்!... என்கிற அமைப்புக்கு ஆகப்பெரிய கெத்து இருக்கிறது! என்றும் உண்மையை இந்தியா அறிய செய்தவர்  டி.என்.சேஷன். அவர் அமைத்துக் கொடுத்த ராஜபாட்டையில் சில தேர்தல் ஆணையர்கள் அவ்வப்போது தெறிக்கவிட்டு வருகிறார்கள். இது தேர்தல் காலம் என்பதால் இந்த அதிகாரிகள் மீது தாமாக லைம்லைட் விழத்துவங்குகிறது. 

அந்த வகையில் தமிழகத்தின் தலைமை தேர்தல் ஆணையரான சத்யபிரபா சாஹூ! இப்போது கவனத்துக்குரிய மனிதராகி இருக்கிறார். கடந்த ஞாயிறு மாலையில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்த்ல் அட்டவணை வெளியானதும் தேசம் முழுக்கவே அந்தந்த மாநில தேர்தல் ஆணையாளர்கள் ஹீரோக்களானார்கள். சாஹூவும் இப்போது ஹிட் ஆபீஸராகி இருக்கிறார். தேர்தல் குறித்து சாஹு தட்டிவிட்டிருக்கும் சில வெளிப்படையான தெறி தகவல்களின் அணிவகுப்பு இதோ... kindal Election Commission...

* தமிழக முழுக்க எங்க டீம் செம்ம பிஸி. வாக்குபதிவு இயந்திரங்களோடு எங்கள் அதிகாரிகள் தயாராக உள்ளார்கள். 

* இனி ஓட்டுக்கான லஞ்ச பணத்தை டிஜிட்டல் முறையில் கொடுக்கப்போகிறார்கள் என்று தகவல் பரவுகிறது. இது உண்மையோ பொய்யோ! ஆனால் ‘ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன்!’ என்று மக்கள் உரத்த குரலில்  சொல்லவேண்டும் என எதிர்பார்க்கிறோம். 

* ஓட்டிங் மெஷினை ஹேக் செய்துவிட முடியும்! என்று கிளம்பியது வதந்தி. தலைமை தேர்தல் ஆணையமே ‘வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வித நவீன தொழில்நுட்ப சாதனம் கொண்டும் ஹேக் செய்ய முடியாது, முடிந்தால் செய்து காட்டுங்கள்.’ என்று சவால்விட்டது. யாராலும் அந்த சவாலை முறியடிக்க முடியவில்லையே. 

* பதட்டமான பூத்களில் ‘வாக்குச்சாவடி கைப்பற்றல்’ எனும் பழைய அடாவடிகளெல்லாம் இப்போது இல்லை. இருந்தாலும் ஜி.பி.எஸ். மூலம் எல்லா பூத்களையும் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை கண்காணிக்க போகிறோம். 

* ஒரு நபரின் ஓட்டானது, கள்ள ஓட்டாக ஏற்கனவே பதிவானது  நிரூபணமானால், அந்த பூத்தில் உள்ள தேர்தல் அதிகாரி சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு வாக்குச்சீட்டு (பேலட்) கொடுத்து, ஓட்டு போட ஏற்பாடு செய்வார். நிறைய கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாக புகார் வந்தால் அதை எதிர்கொண்டு, தீர்வை தர நிறைய வழிகள் உள்ளன. சினிமாவில் வருவது போல் ஒரு ஓட்டுக்காக ஒரு தொகுதியின் ரிசல்டை தள்ளி வைக்க முடியாது. இது சாத்தியமுமில்லை. சினிமா தேர்தல் வேறு, நிஜ தேர்தல் வேறு. புரிஞ்சுக்கோங்க. (இது ‘சர்கார்’ தளபதிக்கு சாஹூ கொடுத்த செம்ம பஞ்ச் ஆச்சே!)

* பெரிய கட்சிகளின் கூட்டணியில் நிற்கும் சிறிய கட்சிகள், பெரிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து கமிஷன் எதுவும் சொல்ல முடியாது. பெரிய கட்சியானது சிறிய கட்சியை நசுக்குவது தெரியுது. ஆனால் தடுக்க சட்டமில்லையே. எங்கள் சின்னத்தில்தான் நிற்போம்! அப்படின்னு சின்ன கட்சிகள்தான் உறுதியான கொள்கையில் இருக்க வேண்டும். 

* இடைத்தேர்தல் என்பது வீண் செலவு என்று சொல்வதை ஏற்க முடியாது. ஜனநாயகத்தை ஏன் ‘செலவு’ எனும் வார்த்தைக்குள் அடக்க வேண்டும்? (ப்பார்றா...)

* வேட்பாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துப் பட்டியலும் சமர்ப்பிக்கபட வேண்டியது இந்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. 

* தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு அறிவிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் திட்டம் இப்போதும் தொடர்கிறது. பணத்தை ஆன்லைன் மூலம் கொடுக்கிறார்கள். அது பிரச்னையில்லை. நேரடியாக கையில் பணம் கொடுப்பதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். (என்னா ஒரு சாணக்கியத்தனமான பதில்)

* நோட்டாவை கொண்டு வந்தது உச்ச நீதிமன்றம்தான். எதிர்காலத்தில் யாராவது வழக்கு போட்டு அதன் மூலம் நோட்டாவுக்கு சில தனிப்பட்ட அதிகாரங்கள் கொண்டு வந்தாலும் வரலாம். ....என்றிருக்கிறார். அரசு தரும் ரெண்டாயிரம் ரூபாய் திட்டத்துக்கு ‘ஸ்டாப்’ இல்லை! என்பது ஆளுங்கட்சியையும், தமிழகத்தில் அத்திட்டத்தின் கீழ் வரும் மக்களையும்  குஷியாக்கியுள்ளது எனபதில் டவுட்டே இல்லை!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios