kind questiond to minister that whether jaya ate idly or not

அமைச்சருக்கு அன்பான கேள்வி..! ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாரா என்பது தெரியாத உங்களுக்கு... இட்லி சாப்பிடாதது மட்டும் எப்படி தெரியும்? அதுவும் பொய்யா? 

சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்களுக்கு எந்த விதமான நியாயமான உணர்வுகளும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அந்தந்த நேரத்தில் தப்பிப்பதற்கு என்ன தேவையே அதை செய்துவிட்டும் பேசிவிட்டும் போய்விடுவார்கள்.

அப்படி ஒரு சந்தர்ப்பவாத அரசியலைத்தான் தமிழகம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. 

சசிகலாவுடன் இணக்கமாக இருந்தபோது ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தோம். இட்லி சாப்பிட்டார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

பின்னர் முதல்வர் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு சசிகலாவை ஒதுக்கியவுடன், அமைச்சர் அந்தர்பல்டி அடித்தார்.

ஜெயலலிதாவை மருத்துவமனையில் நாங்கள் பார்க்கவில்லை. சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் மட்டும்தான் பார்த்தார்கள். அவர் இட்லி சாப்பிட்டதாக கூறியது பொய்தான். சசிகலா சொல்லச் சொன்னதால்தான் கூறினோமே தவிர ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சருக்கு சிம்பிள் கேள்வி:

ஜெயலலிதா இட்லி சாப்பிட்டாரா என்பது தெரியாத உங்களுக்கு... இட்லி சாப்பிடவில்லை என்பது எப்படி தெரியும்? அதுவும் பொய்யா?