பாஜக நிர்வாகி குஷ்புவுக்கு முக்கிய பதவி வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு..

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்புவிற்கு தமிழக பாஜக சார்பாக வாழ்த்துகள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.பெண்களின் உரிமைக்காக போராடியதற்காக கிடைத்த அங்கீகாரம் எனவும் கூறியுள்ளார்.
Khushbu has been nominated as a member of the National Commission for Women

குஷ்புவிற்கு புதிய பதவி

திரைப்பட நடிகையாக இருந்த குஷபு தனது சமூக அக்கறையின் காரணமாக அரசியலில் நுழைந்தார். பல்வேறு கட்சிகளில் முக்கிய பொறுப்புகள் வழங்கி கவுரவிக்கப்பட்ட குஷ்பு தற்போது பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக உள்ளார். கடந்த முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பாக குஷ்பு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனையடுத்து தன்னை கட்சியில் தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டு பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டார். மேலும் பெண்களுக்கு எதிராக குற்றங்களுக்கு எதிராக தனது குரலை அழுத்தமாக பதிவிட்டார். 

Khushbu has been nominated as a member of the National Commission for Women

 தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்

இந்தநிலையில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்புவிற்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குஷ்புவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது  தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டுள்ள தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்புவிற்கு தமிழக பாஜக சார்பாக வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். பெண்களின் உரிமைக்காக போராடியதற்காக கிடைத்த அங்கீகாரம் என கூறியுள்ளார். மத்திய அரசு அளித்துள்ள பதவி தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.

 

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி கட்சி சார்ந்தது அல்ல என தெரிவித்தவர், இது தேசியம் சார்ந்தது என தெரிவித்தார். எந்த பிரச்னையாக இருந்தாலும் பெண்கள் தைரியத்துடன் புகாரளிக்க வேண்டும்; பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனவும் குஷ்பு கூறினார்.

இதையும் படியுங்கள்

அமைச்சரானதும் முதல் முறையாக டெல்லிக்கு சென்ற உதயநிதி..! மோடியை சந்திக்க திட்டமா.? ஆச்சர்யத்தில் பாஜக

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios