எதற்கு எடுத்தாலும் எஸ் சார் என்று சொல்லும்படியான கட்சி தான் காங்கிரஸ் என்று சகட்டுமேனிக்கு வாரியிருக்கிறார் குஷ்பு.

எதற்கு எடுத்தாலும் எஸ் சார் என்று சொல்லும்படியான கட்சி தான் காங்கிரஸ் என்று சகட்டுமேனிக்கு வாரியிருக்கிறார் குஷ்பு.

டி 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய தோற்று போனது. அவ்வளவு தான் ஆளாளுக்கு பூத கண்ணாடியை வைத்துக் கொண்டு ஆட்டத்தை போஸ்ட் மார்ட்டம் பண்ண ஆரம்பித்துவிட்டனர்.

இதில் மற்றவர்களை விட அதிகம் விமர்சிக்கப்படும் நபராக மாறி இருப்பவர் முகமது சமி. அவருக்கு ஆதரவாக ஒரு க்ரூப், எதிரான ஒரு தரப்பு என்று மாறி மாறி கருத்துகளை பதிவிட்டு வருகிறது. காங்கிரஸ், பாஜகவினர் கருத்துகள் சூடு பறக்கின்றன.

இந் நிலையில் குஷ்பு தம் பங்குக்கு ஒரு டுவிட்டர் போட்டு காங்கிரசை கழுவி ஊற்றி இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

நமக்கு ஊழலற்ற பாரதம் தான் தேவை. இங்கு யார் தும்மினாலும் பாஜக மீது குற்றம்சாட்டுகின்றனர். செயல்களினால் கிழிந்து தொங்கி கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை மறக்கும் நேரம் வந்துவிட்டது.

எஸ் சார் என்று எல்லாத்துக்கும் தலையாட்டும் ஒரு எதிர்க்கட்சி நமக்கு தேவையில்லை என்று பதிவிட்டு உள்ளார்.

Scroll to load tweet…