கேரள மாநிலம் 14 மாவட்டங்களில் உள்ள 39  உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத் தோத்ல் நடைபெற்றது. இதில் 21 இடங்களில்  இடது ஜனநாகய முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது. சபரிமலையில் பெரும் ரகளை நடத்திய பாஜகவுக்கு பத்தனம்திட்டையில் வெறும் 7 ஓட்டுகள் மட்டுமே கிடைத் துள்ளது.

கேரள உள்ளாட்சி இடைத்தேர்தல் முடிவுகள் சபரிமலை பிரச்சனையில் மக்களது எண்ண ஓட்டத்தை தெளிவுபடுத்தியுள்ளது. இடது ஜனநாயக முன்னணியின் நிலைபாட்டுக்கு பெரும் ஆதரவை மக்கள் அளித்துள்ளனர்.

மாறாகபாஜகவால் 2 வார்டுகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்துள்ளது. யுடிஎப் 11 இடங்களை பிடித்துள்ளது. எஸ்டிபிஐ-2, சுயேச்சைகள் 2 (ஒருவர் காங்கிரஸ் போட்டி வேட்பாளர்), கேரளகாங்கிரஸ் 1 (காங்கிரசிலிருந்து வெளியேறியவர்).

சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டை மாவட்டத்தில் பத்தனம் திட்டை நகராட்சியின் வார்டு கவுன்சிலருக்கான இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பி.ஜெனின் வெறும் 7 ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார். இங்கு வெற்றி பெற்ற சுயேச்சை வேட்பாளர் அன்சர் அகமது 443 ஓட்டுகள் பெற்றுள்ளார். இதே மாவட்டத்தில் உள்ள பந்தளம் நகராட்சி வார்டில் எஸ்டிபிஐ வேட்பாளர் ஹசீனா 276 ஓட்டுகளுடன் வெற்றிபெற்றுள்ளார். இங்கு பாஜக வேட்பாளர் ரஜனி பெற்ற ஓட்டுகள் 12.

காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் தன்னிடமிருந்த 5 இடங்களை தற்போது இழந்துள்ளது. அதிலும் 2 இடங்களை பாஜகவிடம் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

14 மாவட்டங்களிலும் ஒரு வார்டிலாவது இந்த தேர்தல் நடந்துள்ளது. எர்ணாகுளம் முதல் வடக்கே உள்ளமாவட்டங்களில் எல்டிஎப்பும் யுடிஎப்பும் தங்களது இடங்களை தக்கவைத்துக் கொண்டன. யுடிஎப் மலப்புறம் மாவட்டத்தில் ஒரு இடத்தை இழந்தது என்றால் எல்டிஎப் வயநாட்டில் ஒரு இடத்தை இழந்துள்ளது.

ஆனால் எல்டிஎப் வென்ற இடங்களில் வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. உதாரணமாகபேராம்பறா ஒன்றியத்தில் பாலேரிபகுதியில் எல்டிஎப் வாக்கு 229லிருந்து 1192ஆக அதிகரித்துள்ளது. திருச்சூரில் பாஜகவிடமிருந்து ஒரு இடத்தை கைப்பற்றவும் இடது ஜனநாயக முன்னணியால் சாத்தியமாகி உள்ளது.