கொரோனா வைரஸ் எதிரொலியாக கேரளா உணவுப்பொருள் தட்டுப்பாட்டில்  சிக்கி தவித்து வந்த நிலையில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு உணவுப்பொருட்களை கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.  இந்நிலையில் அந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன .  இந்நிலையில் அந்தந்த மாநில அரசுகள் அந்தந்த மாநிலத்தின் எல்லைகளை மூடி வைரஸ் ஊடுருவாமல் பார்த்து வருகின்றனர் . இந்நிலையில்  தமிழக கேரள எல்லையை தமிழக அரசு சீல் வைத்ததால் , தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு சென்ற உணவுப்பொருட்கள் வினோயோகம் தடைபட்டது . 

அதாவது அரிசியை காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய  உணவுப் பொருட்களுக்கு  கேரளா தமிழகத்தையே நம்பியுள்ளன .  இதனால் கேரளாவில் மிகப் பெரிய உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது .  இதுதொடர்பாக திருச்சூர் பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் காய்கறி பால் தட்டுப்பாடு ஏற்பட்டது .  இதனால் கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி நேற்று  தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனை  நடுப்புள்ளி சோதனைச்சாவடியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் .  பேச்சுவார்த்தையை அடுத்து கேரளாவுக்கு உணவுப் பொருளை கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டது .  என பொள்ளாச்சி ஜெயராமன்  தெரிவித்துள்ளார் .  இது குறித்து தெரிவித்துள்ள அவர்,  

கேரளா  கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள மாநிலம் என்பதால் இக்கட்டான நேரத்தில் தமிழகம் கேரளாவுக்கு உதவி செய்கிறது .  இதுவரை தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ஒன்பது  சோதனைசாவடிகள் வழியாக உணவுப்பொருட்டகள்  கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில் இதற்காக மட்டுமே அனுமதிக்க கூடிய வகையில் சோதனைச்சாவடி செயல்படும்,   கேரளாவுக்கு  செல்லும் ஓட்டுநர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது, மற்றும் பொருட்களை இறக்கி விட்டு திரும்பவும் வாகனத்தை சுத்தம் செய்து .  கிருமி நாசினி தெளித்து .  ஓட்டுனர் மற்றும் கிளீனர் இருவருக்கும் உணவு ஏற்பாடு செய்து தருவது. உள்ளிட்ட கோரிக்கைகளை கேரளா ஏற்றுக்கொண்டது என தெரிவித்தார். எனவே கேரளாவுக்கு உணவு பொருட்கள் அனுமதிக்கப்படுகிறது எனவும் கூறினார் .