Asianet News TamilAsianet News Tamil

கொரோனா சமூகப் பரவலை நெருங்கிவிட்டது.. மீண்டும் போரை தொடங்குங்க... எச்சரிக்கும் பினராயி விஜயன்..!

கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய தருணம் இதுவல்ல என முதல்வர் பினராயி விஜயன் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

Kerala Community Transmission of Covid-19...Pinarayi Vijayan
Author
Kerala, First Published Jul 11, 2020, 6:15 PM IST

கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய தருணம் இதுவல்ல என முதல்வர் பினராயி விஜயன் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துள்ள நிலையில், இந்தியாவில் முதன் முதலில் கொரோனா தொற்று பதிவான கேரளாவில், சிறப்பான தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டது. இதையடுத்து வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோரால் கேரளாவில் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

Kerala Community Transmission of Covid-19...Pinarayi Vijayan

இந்நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை 200க்கும் அதிகமாக உள்ளது. கேரளாவில் இதுவரை 6950 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 27 பேர் உயிரிழந்துள்ளனர். 3820 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3103 மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதனால், தங்களது மாநிலத்தில் கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை மிகவும் நெருங்கிவிட்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. 

Kerala Community Transmission of Covid-19...Pinarayi Vijayan

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன், மாநில மக்களுக்கு கொரோனா பரவல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;-கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. நாம் கொரோனாவுக்கு எதிரான போரை கைவிட வேண்டிய நேரம் இதுவல்ல. நாம் அதிகம் தியாகம் செய்துள்ளோம். கொரோனாவை ஒருமுறை கட்டுப்படுத்தி உள்ளோம். அதேபோல் ஒன்றிணைந்து அதை மீண்டும் செய்யப் போகிறோம். நம்மால் முடியும். எப்படி கட்டுப்படுத்துவது என்பது ம் நமக்கு தெரியும். சமூக விலகலை பின்பற்றுங்கள்; முக கவசம் அணியுங்கள்; அடிக்கடி கைகளை கழுவுங்கள் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios