பாஜகவை வீழ்த்த ஸ்டாலின் ஃபார்முலாவை பாலோ பண்ணும் கெஜ்ரிவால்...! உற்சாகத்தில் திமுகவினர்
திமுக அறிவித்துள்ள மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டத்தை, குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தப்படும் என கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
தமிழகத்தில் திமுக வாக்குறுதி
தமிழகத்தில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனையடுத்து திமுக தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்து. அப்போது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை பல்வேறு தரப்பினரும் மிகப்பெரிய அளவில் வரவேற்றனர். ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டதும் கொரோனா பாதிப்பால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 4 ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை வழங்குவதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். தொடர்ந்து ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய அனுமதி, கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு காப்பீட்டு திட்டம் மூலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி போன்றவற்றுக்கு கையெழுத்திட்டார். இது போன்ற அறிவிப்பு தமிழக மக்களை மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களையும் வெகுவாக கவர்ந்தது.
தமிழக மீனவர்கள் 9 பேர் கைது... தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!!
மேலும் வீடு தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் மக்களை கவர்ந்த நிலையில் தற்போது உயர் கல்வி படிக்கும் பெண்கள் அணைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனையடுத்து இந்த திட்டத்திற்கான செயல்முறை தொடங்கப்பட்டது. இதில் 6 முதல் 12வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் உயர்கல்வி உறுதித்திட்டம் மூலம் ரூ.1000 உதவித்தொகைவழங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில் கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்பட்டது. இந்த திட்டம் மாணவிகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பு பெற்றுள்ளது. இதே போல குறிப்பாக மகளிர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தமிழக பெண்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்தநிலையில் குஜராத் சட்டமன்றத்திற்கு இந்த வருட இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பாஜக- ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே தான் போட்டியானது நடைபெறவுள்ளது. இதனையடுத்து குஜராத்திற்கு பலமுறை சென்ற கெஜ்ரிவால் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். அதில் தற்போது அறிவித்துள்ள ஒரு அறிவிப்பு குஜராத் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.மேலும் இது இலவசம் இல்லை மகளிர்களுக்கான உரிமை தொகை என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் இது மக்கள் பணம் மக்களுக்கே செல்ல வேண்டும் என கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமானது மகளிர்களுக்கு உரிமை தொகை தொடர்பான அறிவிப்பு அதே போன்ற அறிவிப்பை தான் தற்போது குஜராத்தில் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பார்த்த திமுகவினர் தங்கள் தலைவர் அறிவித்த அறிவிப்பை அரவிந்த் கெஜ்ரிவால் பாலோ பண்ணுவதாக உற்சாகத்தில் உள்ளனர்.