Asianet News TamilAsianet News Tamil

CM பதவி சசிகலா வீட்டு வாட்ச்மேன் வேலை இல்ல... - நறுக்குன்னு சொன்ன கே.சி. பழனிசாமி...!

KC Balanasamy said that he did not work for the Chief Ministers post and that his home watchmen did not work and the legislators met the Chief Minister Edappadi Palinisamy.
KC Balanasamy said that he did not work for the Chief Ministers post and that his home watchmen did not work and the legislators met the Chief Minister Edappadi Palinisamy.
Author
First Published Sep 23, 2017, 5:30 PM IST


முதலமைச்சர் பதவியை சசிகலா வாங்கி தர அது அவரது வீட்டு வாட்ச்மேன் வேலை இல்லை எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடிதான் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தோம் எனவும் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சியை சசிகலாவும் ஆட்சியை பன்னீர்செல்வமும் வழிநடத்தி வந்தனர். 
அப்போது பன்னீர் சிறப்பாக செயல்படவே சசிகலாவுக்கு ஆட்சி மீது ஈர்ப்பு ஏற்பட்டது. இதனால் பன்னீரை வழுக்கட்டாயமாக பதவி விலக வைத்தார் சசிகலா. 

இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல வேண்டி இருந்ததால் எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக சசிகலா நியமித்து விட்டு சென்றார். 

பின்னர், முதலமைச்சராக எடப்பாடியை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்தனர். ஆனால் தற்போது எடப்பாடி அணிக்கும் டிடிவி அணிக்கும் மோதல் முற்றி வருகிறது. 

இதனால் ஏற்றிவிட்ட ஏணிப்படியை உதைத்து தள்ளியவர் எடப்பாடி எனவும் அவரை முதலமைச்சராக்கியதே சசிகலா தான் எனவும் டிடிவி தரப்பினர் கூறிவந்தனர். 

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த எடப்பாடி அணியின் கே.சி.பழனிசாமி, முதலமைச்சர் பதவியை சசிகலா வாங்கி தர அது அவரது வீட்டு வாட்ச்மேன் வேலை இல்லை எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடிதான் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தோம் எனவும் தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios