Asianet News TamilAsianet News Tamil

இரும்பு மனிதரும்… முரண்பட்ட மனிதரும்…. மோடியை செமையா கலாய்த்த கஸ்தூரி!!

குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ள நிலையில் பட்டேலின் சிலை மற்றும் மோடி ஆகியோரின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள நடிகை கஸ்தூரி, 'அயன் மேனும் ஐரனி மேனும்'  அதாவது இருப்பு மனிதரும், முரண்பட்ட மனிதரும் என பதிவிட்டு கலாய்த்துள்ளார்.

kasturi tweet about modi
Author
Chennai, First Published Oct 31, 2018, 8:43 PM IST

குஜராத் மாநிலத்தை சேர்ந்த, சர்தார் வல்லபாய் படேல், சுதந்திர இந்தியாவின் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தார். காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார்.பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து, நாடு சுதந்திரம் பெற்றபின், 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய படேல், 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என, அழைக்கப்படுகிறார்.

kasturi tweet about modi

நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, 2013ல், நர்மதை ஆற்றின் நடுவில் உள்ள தீவில், சர்தார் சரோவர் அணை அருகில், 597 அடி உயரத்தில், சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க திட்டமிடப்பட்டது.

kasturi tweet about modi

சிலை அமைக்கும் பணிகள், 2,900 கோடி ரூபாய் செலவில் முழுமை பெற்றதையடுத்து  வல்லபாய் படேலின் பிறந்த தினமான இன்று, அவரது சிலையை, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்;

kasturi tweet about modi

இதையடுத்து சிலையருகே மோடி நிற்பது போன்ற புகைப்படங்கள் டிவிட்டரில் வைரலாகியது.  அதில் மோடி சிலையருகே நிற்பது போன்ற ஒரு புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டரில் பகிர்ந்த நடிகை கஸ்தூரி 'அயன் மேனும் ஐரனி மேனும்' எனக் குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளார்.

kasturi tweet about modi

அதாவது சர்தார் படேலை இரும்பு மனிதர் எனவும் மோடியை முரண்பட்ட மனிதர் (சொல்வது ஒன்று; செய்வது ஒன்று) எனவும் குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios