கருணாநிதி தன்னுடைய வாழ்நாளில் மிகவும் நேசித்த மனிதர் அண்ணா. அதனால் அவர் கொடுத்த மோதிரத்தை மட்டும் கடைசி வரை அவிழ்க்காமல் அணிந்திருந்தார். தன்னுடைய உயிர் பிரியும் நேரத்திலும் கூட அதனை தன்னுடைய கையில் இருந்து அவர் கழற்றவில்லை. 

இந்த மோதிரம் இவருக்கு கிடைத்ததற்கு ஒரு வரலாற்று சம்பவம் உள்ளது.

ஒரு முறை தேர்தல் நேரத்தின் போது, அண்ணா பணம் இல்லாமல் தவித்து வந்தாராம். அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் கருணாநிதி தேர்தல் பணிக்காக ரூ.11 லட்சத்தை வசூலித்து தந்துள்ளார்.

இதனை பாராட்டி அண்ணா உடனடியாக தன்னுடைய கையில் இருந்த மோதிரத்தை கழற்றி, கருணாநிதியின் கையில் போட்டார். இந்த மோதிரத்தை கருணாநிதி மிகவும் மதித்தார். பலமுறை கஷ்டத்தில் இருந்தபோதிலும் இந்த மோதிரத்தை மட்டும் கருணாநிதி கழட்டியதே இல்லையாம்.

இதுகுறித்து கடந்த 2000 ஆம் ஆண்டு பிரபல நாளிதழ்க்கு பேட்டியளித்த கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், 'அறிஞர் அண்ணா' போட்ட மோதிரத்தை தான் இப்போது வரை கலைஞர் அணிந்துள்ளார். 

இதை தொடர்ந்து மற்றொரு தொண்டர் ஒரு முறை பரிசாக கொடுத்த பவள மோதிரத்தை மட்டும் போட்டிருக்கிறார். அவருக்கு நிறைய பேர் மோதிரம் பரிசாக கொடுப்பார்கள் ஆனால் எதையுமே அவர் போட்டதே இல்லை. 

ஆனால் எப்போதும் தன்னுடைய நண்பர்கள் மற்றும் கட்சியினருடன் இருப்பதை அதிகமாக விரும்புவார். அவர் இருக்கும் இடம் எப்போதுமே சிரிப்பு ஒலி மட்டுமே கேட்டுக்கொண்டிருக்கும்... தன்னுடைய விரோதியே தனிமையைதான் என்று அடிக்கடி கூறுவார் என்று தெரிவித்துள்ளார்.