Asianet News TamilAsianet News Tamil

கரூர் விரைவில் மாநகராட்சியாக அறிவிக்கப்படும்.. அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன குட்நியூஸ்.!

முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வார். ஜூன் 3ம் தேதி கொரோனா நிவாரணமாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்றார். 

Karur will soon be declared a corporation... minister senthil balaji
Author
Karur, First Published Jul 5, 2021, 11:11 AM IST

முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வார் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

கரூர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த வாரம் முதல் மக்கள் சபைக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்று பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று வருகிறார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர்;- முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வார். ஜூன் 3ம் தேதி கொரோனா நிவாரணமாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்றார். அதேபோல் மே மாதமே முதல் தவணையாக ரூ.2000, ஜூன் 3ம் தேதி இரண்டாவது தவணை ரூ.2000 வழங்கப்பட்டது. இவற்றுடன், 14 மளிகைப் பொருட்கள் தொகுப்பையும் வழங்கினார். 

Karur will soon be declared a corporation... minister senthil balaji

கரூர் மாவட்டத்தில் கொசுவலை, ஜவுளி, பஸ் பாடி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது, கரூர் நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவதற்கு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

கரூர் நகராட்சியில் உள்ள 43 வார்டுகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து குளித்தலை நகராட்சி, 11 பேரூராட்சிகள், 157 ஊராட்சிகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படும். கடந்த வாரம் 4,000க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு அவை துறைவாரியாகப் பிரிக்கப்பட்டு நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios