Asianet News TamilAsianet News Tamil

கரூர் எம்எல்ஏ வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனை.!

மோசடி வழக்கில் சிக்கியுள்ள தி.மு.க., எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
 

Karur MLA's house raided by Central Crime Branch police.!
Author
Tamil Nadu, First Published Sep 12, 2020, 8:50 AM IST

மோசடி வழக்கில் சிக்கியுள்ள தி.மு.க., எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015 வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த 2017ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

Karur MLA's house raided by Central Crime Branch police.!

கடந்த சில நாட்களாக இந்த வழக்கில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், தி.மு.க., எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில்பாலாஜியை தொந்தரவு செய்து வருவதாகவும் அதிமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு பழிவாங்கி வருகிறது. இதற்கெல்லாம் பயப்பட போவதில்லை என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios