கரூர் என்று சொன்னாலே அதிமுக தொண்டர்களுக்கு முதலில் ஞாபகம் வருவது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிதான். அந்த அளவுக்கு கரூர் மாவட்டத்தில் தொண்டர்களை தனது பிடிக்குள் வைத்திருந்தார்.

நாடாளுமன்ற சபாநாயகர் தம்பிதுரை கரூர் தொகுதியில் எம்.பி. தேர்லில் நின்றபோது மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன்பு தொண்டர்களை லட்சக்கணக்கில் திரட்டி மாஸ் காட்டியவர்தான் செந்தில் பாலாஜி/

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்து, டிடிவி. தினகரன் தலைமையில் அமமுக உருவானது, தற்போது தினகரனின் முக்கிய தளபதியாக உள்ளார் செந்தில் பாலா.

மிகவும் நெருக்கம் காட்டிய தம்பிதுரை போன்றோர் செந்தில் பாலாஜிக்க எதிராக தற்போது செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் அமமுகவினர் 1300 பேர் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இன்று இணைந்தனர்.

க்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை  மற்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்  மற்றும் கிருஷ்ணராயபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் _கீதா அவர்கள் ஆகியோர் முன்னிலையில் 1300 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

கரூர் மாவட்டம் க. பரமத்தி பகுதியைச் சேர்ந்த அமமுக, திமுக மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த  ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்தந்த கட்சியிலிருந்து விலகி  அம்மா மக்கள் முன்னேற்றக் கழக , க.பரமத்தி தெற்கு ஒன்றிய துணை செயலாளர்.கருப்புசாமி  ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.

தற்போது அமமுகவில் இருந்து தொண்டர்களை இழுக்கும் படலம் தொடங்கியுள்ளதால் தினகரன் தரப்பினர்  கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.