அதிமுக அலுவலகத்தில் திடீர் சோதனை..’ டென்ஷனான விஜயபாஸ்கர்.. கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ‘திடீர்’ சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

Karur aiadmk party office raid police against protest ex minister vijayabaskar

கரூர் பழனியப்பா தெருவில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம், பரிசுப்பொருட்கள் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 

சோதனையில், எதுவும் கிடைக்காததால் அதிகாரிகள் சோதனை செய்ததில் எந்த ஒரு பொருளோ பணமோ இல்லை கைப்பற்றப்படவில்லை என எழுதிக் கொடுத்துவிட்டு திரும்பிச் சென்றனர். இந்நிலையில் எதுவும் இல்லாத நிலையில், யார் இந்த புகார் கொடுத்தது என்று கட்சி அலுவலகத்திற்கு வந்த மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம் ஆர் விஜயபாஸ்கர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Karur aiadmk party office raid police against protest ex minister vijayabaskar

இந்த நிலையில், கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் திடீரென்று அதிமுக அலுவலகத்திற்குள் சென்று சோதனை மேற்கொண்டார். அப்போது, போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுகவினர் 100க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றுகூடி காவல்துறையிடம் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

இதனால், பரபரப்பு ஏற்பட்டது.  காவல்துறையினர் அனைவரும் வெளியேறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்,’கரூர் மாநகராட்சிக்கு 2 லட்சம் ஹாட்பாக்ஸ் மற்றும் 1, 000 ரூபாய் ஆளும் திமுக கட்சி கொடுத்து வருகின்றனர். அதை எந்த தேர்தல் பறக்கும் படை பிடிக்கவில்லை.

Karur aiadmk party office raid police against protest ex minister vijayabaskar

கரூர், கோவையில் பணமழை கொட்டுகிறது. அதை காவல்துறையினர் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்யவில்லை. கோவையில், அதிமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகளை கைது செய்தனர். அதைபோலே கரூர் மாவட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதிமுக வேட்பாளர்களை திமுகவினர் வீடு புகுந்து மிரட்டுகின்றனர்.

அதிமுக வெற்றிபெற்றாலும். திமுக வெற்றி பெற்றதாக அறிவிப்போம். நீங்கள் செலவு செய்வது எல்லாம் வெட்டி செலவு தான் என அதிகாரிகளே வெளிப்படையாக வேட்பாளர்களை இடம் தெரிவிக்கின்றனர். கரூர் மாநகராட்சியில் 48 வார்டில் 1 வரை ஏற்கனவே 15 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கி விட்டனர்.

கரூர் மண்டல தேர்தல் பொறுப்பாளர் மந்திராசலம் ஜனநாயக முறை படி தேர்தல் நடத்தமாட்டார். அவர் திமுக மாவட்ட செயலாளர் போல் செயல்படுகிறார். வெற்றி நியாமாக இருக்காது. சட்டமன்ற தேர்தலில் கரூரில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மக்களிடம் போலியான கொலுசை கொடுத்து திருட்டு தனமாக வெற்றி பெற்று ஏமாற்றியவர். ஆகையால் பொதுமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்’ என்று கூறினார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios