தி.மு.க - தி.க., பின்னணியில்தான், கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் தைரியமாக இயங்கி வந்தது ஏற்கனவே அம்பலமாகி விட்டது. திமுக ஐடி விங்குடன் தொடர்பிலிருந்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. ஆனாலும் திமுக தங்களுக்கும் கறுப்பர் கூட்டத்துக்கும் தொடர்பில்லை என கைகழுவி விட்டது. அடுத்து இந்து மக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட இந்து விழாக்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் வாழ்த்து போஸ்டர் ஒட்டி போலிப்பற்றை வெளிப்படுத்தினர். 

தங்களது கட்சியில் இருக்கும் ஒருகோடி தொண்டர்கள் இந்து மதத்தை சார்ந்தவர்கள் என பறைசாற்றியது திமுக தலைமை.  கந்த சஷ்டி கவசத்தை விமர்சித்து வீடியோ வெளியிட்டு, பெரும் சர்ச்சையானதால் கறுப்பர் கூட்ட அணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள். இந்தப் பிரச்னை, தி.மு.க.,வுக்கு எதிராக போனதால் கைகழுவிட்டார்கள். இதனால் சிறையில் உள்ள கறுப்பர் கூட்டத்து குழுவினர்,  நம்பிக்கை துரோகத்தால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

 வெளியில் வந்ததும், தி.மு.க.,வை கடுமையாக விமர்சிக்க தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இதனை வெளியில் உள்ள  தங்களது கூட்டாளிகளுக்கும் கொண்டு சென்று இனியும் திமுகவை நம்ப வேண்டாம். நம்பினால் சிக்கல் வரும்போது கைகழுவி விடுவார்கள். எதிரிகளை கூட நம்பி விடலாம். கூட இருந்தே கைகழுவும் துரோகிகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது. வெளியில் வந்ததும் அவர்களது முகத்திரையை கிழிப்பதுதான் முதல் வேலை’’ என பொங்கித் தீர்த்து விட்டார்களாம்.