சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய முக்குலத்தோர் புலிப்படை எம்எல்ஏ கருணாஸ் டி.சி அரவிந்தனை சரமாரியாக தாக்கிப் பேசினார். அவர்களுக்குள் என்ன பிரச்சனை என பலருக்கும் எழுந்த சந்தேகம் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

டி.சி.அரவிந்த் கடந்த 2016 ஆம் ஆண்டு விருதுநகர் எஸ்.பி.யாக இருந்துள்ளார். அப்போது கருணாஸ் சமூகத்தைச் சேர்ந்த பலர் மீது வழக்குகள் போட்டதாகவும், மற்றொரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் அவரது ஆதரவாளர்கள் கருணாசிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து அவர் சென்னைக்கு மாற்றலாகி வந்துவிட்டார். அப்போது, வளசரவாக்கம் பகுதியில் இஸ்லாமியர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். அவரை கடத்தப் பயன்படுத்திய காரில், குறிப்பிட்ட சமூகத் தலைவர் வாழ்க என எழுதப்பட்டிருந்ததாகவும், அந்த காரை ட்ரேஸ் பண்ணி முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் பொதுச் செயலாளர் தாமோதர கிருஷ்ணனிடம் டி.சி.அரவிந்தன் விசாரித்தாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பாக விசாரிப்பதற்காக தாமோதர கிருஷ்ணனின் வீட்டுக்குச் சென்ற அரவிந்தன் சற்று காட்டமாக பேசியிருக்கிறார்.இது கருணாஸ் தரப்புக்கு மிகுந்ம ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால்தான் பொது மேடையில் கருணாஸ் அந்த குதி குதித்திருக்கிறார். தற்போது அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.