முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கலந்தாய்வு கூட்டம் சென்னை தி நகரில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கருணாஸ்; சமீபத்தில் ஆரம்பித்த கட்சிகள் எல்லாம் தேர்தலில் போட்டியிட தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கிறது. 

ஆனால் தமிழகத்தில் 27 சதவிகிதம் உள்ள முக்குலத்தோர் சமூகத்தில் உள்ள நாம் தயாராக வேண்டும். 30 மாவட்டத்திலிருக்கும் முக்குலத்தோர் சமூகத்தினர் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தேசிய கட்சியை தவிர்த்து வேறு கட்சிகள் வாய்ப்பளித்தால் நாம் தேர்தலில் போட்டியிடுவோம்.

மேலும், மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை வைக்க வேண்டும் அதற்கான கையெழுத்து இயக்கம் இன்று முதல் ஆரம்பித்துள்ளோம்.முகிலனை கண்டுபிடிக்க அரசை வலியுறுத்துகிறோம்.

இந்த ஆலோசனைக்கு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய  கருணாஸ்; நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்களது நிலைப்பாட்டினை இன்னும் இரண்டு நாட்களில் தெரிவிப்போம். அதிமுக அல்லாத கட்சியுடன்தான் கூட்டணி இருக்கும்.


 
மேலும், புயல் சேதத்தை பார்வையிடாத்தை கண்டித்தும், சுதந்திர போராட்ட வீர்ர் முத்துராமலிங்கத்தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்க கோரி 50 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.  இதை கண்டுகொள்ளாத மத்திய அரசை கண்டித்தும்! தேர்தலுக்கு மட்டும் தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து மார்ச் 1ஆம் தேதி கருப்புக் கொடி காட்ட உள்ளோம். அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.