திமுக தலைவர், கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவ மனையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். இவரை 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கண்காணித்து வருகின்றனர்.

தற்போது கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது என காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவர் குழு தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் செல்வராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பற்றி விசாரிக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், வெங்கைய நாயுடு உள்ளிட்டோர், திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர்.,அவர்கள் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.  இதனால் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.