Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதி விரும்பும் அம்பாசிடர் பயணம்...! தனித்துவமாக காட்டிய அறிய தகவல்கள்...!

திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது கருப்பு கண்ணாடி ஒரு அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. 1954-ம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் அவரது கண் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் நடந்தது. அதன் பிறகு தான் அவர் பவருடன் கூடிய கருப்பு கண்ணாடியை அணிய ஆரம்பித்தார்.

karunanithi like to travel ambasidor car

திமுக தலைவர் கருணாநிதிக்கு அவரது கருப்பு கண்ணாடி ஒரு அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. 1954-ம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் அவரது கண் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் நடந்தது. அதன் பிறகு தான் அவர் பவருடன் கூடிய கருப்பு கண்ணாடியை அணிய ஆரம்பித்தார்.

1990-களில் தான் கட்சி கரை போட்ட அங்கவஸ்திரத்தில் இருந்து மாறி மஞ்சள் நிற சால்வே போட ஆரம்பித்தார். 

சுட்டெரிக்கும் வெயில் காலாமாக இருந்தாலும் சரி, பணி காலமாக இருந்தாலும் சரி, வெதுவெதுப்பான தண்ணீரில் தான் குளிப்பார்.

வெள்ளை நிறத்தில் ஆன தோல் செருப்பு அணிவது தான் அவருக்கு பிடிக்கும். நடைபயிற்சி செல்லும் போது மட்டும் 'கட் ஷூ' அணிவார்.

தன்னுடைய உயிருக்கும் மேலாக நேசித்த எழுத்துப்பணியை இரவிலேயே வைத்துக் கொள்வார். இரவில் எத்தனை மணிக்கு தூங்க சென்றாலும், அதிகாலை 5:30, மணிக்கு எழுந்து விடுவர்.

அண்ணா அறிவாலயம் கட்டிய பிறகு, அங்கு நடைபயிற்சி செல்ல ஆரம்பித்தார். உடல்நிலை நாராக யோருக்கும் வரை காலையில் அங்கு சென்று 20 நிமிடம் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

காலையிலேயே எல்லா தினசரி பத்திரிக்கைகளையும் படித்து முடித்துவிடுவார். அரசியல், உலக நடப்புகளை விரல் நுனியிலோ வைத்திருப்பார். 

அம்பாசிடர் காரில் பயணம் செய்வதையே விரும்புவார்.

கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும், தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளை விரும்பி பார்ப்பார். இதேபோல் பழைய சினிமா படங்களையும் விரும்பி பார்பார்.

ஒரு நாளைக்கு இரு முறை ஆடைகளை மாற்றுவார். தேர்தல் சமயம் மற்றும் அதிகமான வெயில் சமயங்களில் வெளியே செல்லும் போது மூன்று முறை சட்டை மாற்றுவார். இரவில் லுங்கி அணிவார். இவருக்கு எப்போது ஆடைகள் தைத்து கொடுப்பது... கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தையல் காரர்தான். 

எப்போதும் மழையை ரசிப்பார். நாய்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios