திமுக செயல் தலைவர் கருணாநிதியின் உடல்நிலை முன்னேறியுள்ளதாகவும், திமுக மண்டல மாநாட்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் அவர் பார்த்ததாகவும் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. ஈரோடு மண்டல மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது. நேற்று  முன்தினம் காலை இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கியது.  இந்த மாநாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட 50 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் திமுகவினர் ஏராளமானோர் பங்கேற்றனர். விழாவில், பல்வேறு தலைப்புகளில், தலைவர்கள், மக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் உரை நிகழ்த்தினர். 

இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசும்போது,  தமிழக அரசியலில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. அறிவியல்படி வெற்றிடம் உடனடியாக நிரப்பப்பட்டு விடும். எனவே வெற்றிடம் எதுவும் இல்லை. தி.மு.க.வில் எப்போதும் வெற்றிடம் இருக்காது. ஊழல் நிறைந்த இந்த ஆட்சி இன்னும் ஒருவாரத்தில் இருக்காது. இந்த ஆட்சியை கலைத்து நாம் ஆட்சியை பிடிக்கப்போவது இல்லை என கூறினார்.

திமுக சார்பில், சுயமரியாதை திருமணம் ஈரோட்டில் நடத்தப்பட்டது. அப்போத பேசிய அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநாட்ட காட்சிகளை திமுக தலைவர் கருணாநிதி, தொலைக்காட்சியில் பார்த்ததாக கூறினார். கருணாநிதியின் உடல்நிலை முன்னேறியுள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தார். 

நேற்று மாநாட்டில் திரண்டக் கூட்டம் இனிமேல், திமுக மாநாடு நடத்த அனுமதி கிடைக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், திமுக மண்டல மாநாடு மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.