உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி மாலை 6.10 மணியளவில் காலமானார். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

karunanidhi dead க்கான பட முடிவு

மேலும், நாடு முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் 7 தினங்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கருணாநிதியின் மறைவையொட்டி இன்று ஒருநாள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி இன்று மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

karunanidhi dead க்கான பட முடிவு

டெல்லி மற்றும் அனைத்து மாநிலங்களின் தலைநகரங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன.

இதே போல் கருணாநிதியின் மறைவையடுத்து கர்நாடகா, கேரளா , ஆந்திரா, தெலங்கானா, பீகார் உள்ளிட்ட இநதியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இன்று  ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

karunanidhi dead க்கான பட முடிவு

இந்தியாவிலேயே முதன் முறையாக பதவியில் இல்லாத ஒருவர் இறந்ததற்கு அத்தனை மாநிலங்களிலும் துக்கம் அனுசரிப்பது இதுவே முதல் முறை என்றும் இத்தகைய பெருமை கருணாநிதிக்க மட்டுமே கிடைத்திருக்கிறது என தமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு தெரிவிக்கின்றனர்.