தோல்வியே காணாத கலைஞர்...!

கலைஞர் கருனாநிதியின் மறைவு தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கலைஞர் இதுவரை தான் போட்டியிட்ட 13 சட்டமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தவர்.குளித்தலை சட்டமன்ற தொகுதி தொடங்கி திருவாரூர் வரையில் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி  கண்டுள்ளார்.

வயது மூப்பு காரணமாக, நேற்று மாலை இம்மண்ணுலகை விட்டு மறைந்த கருணாநிதியின் உடல்  தற்போது, ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு, இன்னும் சற்று நேரத்தில் அதாவது சரியாக நான்கு மனை அளவில், அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில், ராஜாஜி ஹாலில் இருந்து, மெரினாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.அங்கு அவரது உடல் அடக்கம் செய்ய உள்ளது.

கலைஞா் கருணாநிதி முதல்முறையாக 1957ம் ஆண்டில் குளித்தலை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினா் தோ்தலில் வெற்றி பெற்றார். குளித்தலை முதல் அடுத்தடுத்து தான் நின்ற அனைத்து தொகுதிகளிலும்  வெற்றி பெற்று, கடைசியாக திருவாரூர் தொகுதியிலும் நின்று வெற்றி பெற்றார். தான் நின்ற  தொகுதில் எல்லாம் வெற்றி பெற்று கடைசியில், தான் படுத்துக்கொண்டே வென்ற தொகுதி மெரீனா. 

வாழ்க்கை முழுவதும் போராட்டம் போராட்டம் என வாழ்ந்த அவர், தான் இறந்த பிறகும் அவருக்காக போராடி, மெரினாவில்  இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.