திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரி ஆர்.எஸ். பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீல்சன் முறையிடு செய்துள்ளனர். அரசு தரப்பிற்கு மனுவை கொடுக்க சொல்லிய பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் அவசர வழக்காக 10.30 விசாரணைக்கு எடுத்து கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ அரசியலில் இரண்டு நூற்றாண்டுகளை கடந்து பல சாதனைகளை படைத்த, மூத்த அரசியல் தலைவர் கலைஞர் கருணாநிதி தனது 94-வது வயதில் இன்று காலமானார். அவரது இழப்பை சகித்து கொள்ள முடியாமல், திமுக தொண்டர்களும், தமிழக மக்களும் மிகுந்த துயருற்றிருக்கின்றனர். 

கடந்த 11 நாட்களுக்கு முன்னர் காவேரி மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்ட கருணாநிதியின் உடல் நிலை ஆரம்பத்தில் நன்கு முன்னேறி வந்தது. ஆனால் நேற்று திடீரென அவரது உடல் நிலை மீண்டும் மோசமானது. 24 மணி நேரம் மருத்துவர்கள் கெடு அளித்திருந்த நிலையில், இன்று மாலை 6.10 மணியளவில் கலைஞர் காலமானார். கலைஞர் தன் உயிரினும் மேலாக நேசித்த அறிஞர் அண்ணாவின் சமாதி அருகே அவரை நல்லடக்கம் செய்ய விரும்பி மெரினாவில் இடம் கோரி இருந்தனர் திமுகவினர் மற்றும் அவரது குடும்பத்தார்.

அதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி சட்ட சிக்கல் என காரணம் கூறி மறுப்பு தெரிவித்தார்.  தற்போது கிண்டியில் காமராஜர் நினைவிடம் அருகே கலைஞருக்காக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கலைஞரை அண்ணாவின் அருகே சேர்த்துவிட திமுகவினர் கடுமையாக போராடி வருகின்றனர்.இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கோரி ஆர்.எஸ். பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீல்சன் முறையீடூ செய்துள்ளனர். அரசு தரப்பிற்கு மனுவை கொடுக்க சொல்லிய பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் அவசர வழக்காக 10.30 விசாரணைக்கு எடுத்து கொள்வதாக ஒப்புதல் அளித்துள்ளார்.