திமுக தலைவர் தலைவர் கருணாநிதியின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், அவரது BP, Pulse போன்றவை மிகவும் குறைது விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கருணாநிதி அபாய கட்டத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து காவேரி மருத்துவமனை  உள்ளிட்ட  பல பகுதிகளில் அதிரடிப் படையின் குவிக்கப்பட்டுள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு, சிறுநீர் பாதையில் ஏற்பட்ட தொற்று, காய்ச்சல் உள்ளிட்ட  பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக சென்னை  காவேரி மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சென்ற வாரம் திடீரென அவரது உடல் நிலை மிகுந்த மோசமடைந்தது. 

ஆனால் டாக்டர்கள் அளித்த  தீவிர சிகிச்சையால்  கடந்த சில நாட்களாக முன்னேறி வந்த அவரது உடல்நிலையில் நேற்று மாலை  மீண்டும் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், அவரது வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருவதால்  அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும்  மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என்ற  பகீர் அறிவிப்பையும் மருத்துவமளை வெளியிட்டது. இதையடுத்த கருணாநிதியில் உறவினர்கள், திமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் என அனைத்துத் தரப்பினரும் கவலை தோய்ந்த முகத்துடன் குவிந்துள்ளனர்.இந்நிலையில் கருணாநிதியின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும், அவரது BP , Pulse  போன்றவை மிகவும் குறைது விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நிமிடத்துக்கு நிமிடம்  மருத்துவமனையில் பதற்றம் கூடிக்கொண்டே போகிறது. தொண்டர்களும் கண்ணீர்விட்டு அழத் தொடங்கிவிட்டனர். பெண்கள் மிகுந்த துக்கத்துடன் கதறி அழுகின்றனர்.

இந்நிலையில் காவேரி மருத்துவமனையை அதிரடிப் படையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சுற்றிலும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று சென்னையில் பல பகுதிகளில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் போலீசார் அலர்ட் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து எங்கும் பதற்றம்  நிலவுகிறது. இதனிடையே ஸ்டாலின் திடீரென முதலமைச்சரை சந்தித்ததால் இந்த பரபரப்பு மேலும் கூடியுள்ளது.