அறுவை சிகிச்சை நடந்து,
ஐந்து மாதமாக 
சிரமப்படுகிறேன் !
 கலைஞருக்கு 
சர்வதேச தரத்தில் 
சிகிச்சை அளிக்கப்பட்டு 
பாதுகாக்கப்பட்டார்.  
சிறுநீரகத் தொற்று நோய் 
கலைஞருக்கு வராமலிருந்தால். மருத்துவ அதிசயத்தை நிகழ்த்தி,
100 ஆண்டுகள் 
வாழ்ந்திருப்பார் என்று,
இதய நோய் டாக்டர்  இதய நோய் மருத்துவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


முதியவர்களுக்கு 
இந்தப் பதிவில் கண்டுள்ள 
PROSTATE தொடர்பான தகவல்கள் 
பயனாக இருக்கும் என்று கருதி அந்த பதிவு இதோ உங்களுக்கு.

ஜெயலலிதா, 
கருணாநிதி, 
வாஜ்பாயி 
மூவரையும் முடக்கிய 
சிறுநீர்ப் பாதை தொற்று... 
 
அலட்சியம் 
வேண்டாமே!
 
கீழ்க்காணும் 
எட்டு அறிகுறிகள் இருந்தால் 
சிறுநீர்ப் பாதை 
தொற்றாக இருக்கலாம்.... கவனம்!
 
முதுமையின் காரணமாக 
கோபாலபுரம் இல்ல
த்தில் ஓய்வு எடுத்து வந்த 
கலைஞர் கருணாநிதிக்கு, 
சிறுநீர்ப் பாதை தொற்று காரணமாக 
ஏற்பட்ட காய்ச்சலால், 
அண்மையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பலனில்லாமல் மரணித்தார். 

அதேபோல, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் 
சிறுநீர்ப் பாதை தொற்று பாதிப்பு இருந்தது. முன்னாள் பிரதமரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான வாஜ்பாயியும் 
சிறுநீர்ப் பாதை தொற்றின் காரணமாக 
அண்மையில் டெல்லி எய்ம்ஸ் 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 
சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
 
சிறுநீர்ப் பாதை தொற்று... 
அண்மைகாலமாகத்தான் 
அதிகரித்து வருகிறதா அல்லது 
இது வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் பிரச்னையா, இது உண்டாவதற்கான காரணிகள் என்னென்ன... போன்ற சந்தேகங்களைச் சிறுநீரக அறுவைச்சிகிச்சை நிபுணர் எம்.ஜி.சேகரிடம் முன்வைத்தோம்.


 
சிறுநீர்ப் பாதை தொற்று, 
சிறியவர், பெரியவர் என 
அனைத்து வயதினருக்கும் ஏற்படும் பிரச்னை. 
குறிப்பாக வயதானவர்களுக்கும் 
பெண்களுக்கும் இது ஏற்படும் வாய்ப்பு அதிகம். சிறுநீர்ப் பாதைத் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டுகொள்ளாமல்விட்டால், 
சிறுநீரகச் செயலிழப்பு உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளை உண்டாக்கிவிடும். 
எனவே, சிறுநீர்ப் பாதை தொற்று குறித்து அறிந்துகொண்டு, 
அது குறித்த விழிப்புஉணர்வுடன் 
இருப்பதே நல்லது’’ என்கிற மருத்துவர் சேகர், 

அதற்கான காரணங்கள், அறிகுறிகள், பரிசோதனை, சிகிச்சை முறைகள் குறித்து விரிவாகப் பேசுகிறார்...


சிறுநீர் செல்லும் பாதையில் 
நோய்த் தொற்று ஏற்படுவதைத்தான் `
சிறுநீர்ப் பாதை தொற்று’ (Urinary Tract Infection) என்கிறோம். 
அதாவது சிறுநீர்ப் பாதை 
வழியாகச் செல்லும் கிருமி, 
சிறுநீர்ப் பையை அடைந்து, 
மிக வேகமாகப் பெருக்கமடையும். 
பொதுவாக, நம் சிறுநீரக மண்டலமே 
இது போன்ற கிருமிகளை 
அகற்றும் தன்மை கொண்டது. 
ஆனால், இந்தச் செயல்பாடு பாதிக்கப்படும்போது நோய்த் தொற்று ஏற்படும். 
சிறுநீரகம், சிறுநீரகப் பாதை, சிறுநீர்ப்பை... எனச் சிறுநீரக மண்டலத்தில் எங்கு வேண்டுமானாலும் நோய்த் தொற்று ஏற்படலாம். 
இந்தத் தொற்று, 
சிறுநீரகம் வரை பரவினால், 
பாதிப்பு அதிகமாக இருக்கும்.

பெரும்பாலும் இ-கோலை (E. coli) உள்ளிட்ட சிலவகை பாக்டீரியாக்கள்தாம் சிறுநீர்ப் பாதை தொற்றுக்குக் காரணமாக இருக்கின்றன.

அறிகுறிகள்...

 சிறுநீர் கழிப்பதில் சிரமம், எரிச்சல், மிகக் குறைவான அளவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், காய்ச்சல், சிறுநீரில் நாற்றம், வாந்தி, அடி வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் வலி உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றும். நோய்த் தொற்று எந்த இடத்தில் தீவிரமாக இருக்கிறது என்பதைப் பொறுத்து அறிகுறிகள் மாறுபடும்.

சிறுநீரகம்: மேல் முதுகுவலி, பக்கவாட்டில் வலி, காய்ச்சல், குளிர், குமட்டல், வாந்தி ஏற்படலாம்.

சிறுநீர்ப்பை: இடுப்பில் அழுத்தம், கீழ் வயிற்றில் அசௌகரியம், அடிக்கடி, மிகக் குறைந்த அளவில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் போன்றவை இருக்கும்.

சிறுநீர்க் குழாய்: சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உண்டாகும். தாங்க முடியாத வலி ஏற்படும்.

யாருக்கெல்லாம் வரலாம்?

சிறுநீரகக்கல் பிரச்னை இருப்பவர்கள்

சர்க்கரை நோயாளிகள்

ஏற்கெனவே சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள்

வயதானவர்கள்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள்

சிறுநீர்க் கசிவு பிரச்னை இருப்பவர்கள்

புராஸ்டேட் வீக்கம்

சிறுநீரக அறுவைச்சிகிச்சைக்காக வெளிப்புறக் குழாய் பொருத்தப்பட்டவர்கள் (Bladder catheter use)

அல்சைமர், பார்கின்சன் போன்ற மறதி நோய் உள்ளவர்கள்.

 இவை தவிர, பாலின உறுப்புகளில் சுகாதாரமின்மை காரணமாகவும் சிறுநீர்ப் பாதை தொற்று ஏற்படும். மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துபோகும்.
 
இதனால் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு வெஸிகோயூரிடெரல் ரெஃப்ளெக்ஸ் (VesicoUreteral Reflux) என்ற பிரச்னையும் இந்தத் தொற்றுக்குக் காரணமாகலாம். அதாவது, சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப் பாதைக்கு வரும் சிறுநீர், மீண்டும் சிறுநீரகத்துக்குச் செல்லும் நிலைதான் வெஸிகோயூரிடெரல் ரெஃப்ளெக்ஸ்.

பரிசோதனை

இந்தத் தொற்று இருப்பதை அறிய சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டும். அதில், வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள் அல்லது பாக்டீரியா உள்ளதா என்பதெல்லாம் கண்டறியப்படும். 

சிறுநீர் கல்ச்சர் பரிசோதனை செய்யப்பட்டு, எந்த மாதிரியான கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதும் கண்டறியப்படும்.

அடிக்கடி இந்தத் தொற்று ஏற்பட்டால், சி.டி., எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனைகளைச் செய்யவேண்டியிருக்கும்.

தீர்வு...

முதற்கட்டமாக, சிறுநீர்ப் பாதைத் தொற்று பாதிப்புக்கு ஆன்டி பயாடிக் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். பரிசோதனையில் வேறு பாதிப்பின் அறிகுறியாக சிறுநீர்ப் பாதைத் தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தால், அந்தப் பாதிப்பை சரிசெய்வதன் மூலம் பிரச்னைக்குத் தீர்வு காணலாம்.

தவிர்க்க சில வழிமுறைகள்...

* தினமும் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும். இது சிறுநீர் கழிக்கும் உணர்வை அதிகப்படுத்தும். சிறுநீர் கழிக்கும்போது, சிறுநீர்ப் பாதையில் உள்ள கிருமிகள் வெளியேற்றப்படும்.

* சிறுநீரை அடக்கக் கூடாது. 

சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினால் உடனடியாகக் கழித்துவிட வேண்டும்.

 பருத்தியால் ஆன உள்ளாடைகளையே அணிய வேண்டும். இறுக்கமான உள்ளாடைகளை அணியக் கூடாது.

* சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். மலம் கழித்துவிட்டு ஆசனவாயைக் கவனமாகக் கழுவ வேண்டும். மேலிருந்து கீழாகக் கழுவ வேண்டும். பிறப்புறுப்பில் படாதபடி கவனமாக இருக்க வேண்டும்.