ராஜாஜி அரங்கை சுற்றி உள்ள சாலைகள் அனைத்திலும் கடல்போல் மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. மக்கள் வெள்ளத்தை ஒழுங்குப்படுத்த போலீஸ் இல்லாததால் நெரிசலில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். சாரைசாரையாக வரும் மக்கள், தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறி வருகின்றனர். இந்நிலையில் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த அரசியல் கட்சி பிரமுகர்கள், திரையுலகினர் குவிந்து வருகின்றனர்.

25ம் தேதி உடல்நலக்குறைவால் கோபாலபுர இல்லத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிறகு காவேரி மருத்துவமனையில் 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் காலமானார். 

இதனையடுத்து பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதி உடல் ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய தலைவர் முகத்தை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என தொண்டர்கள் அலைக்கடலேன குவிந்து வருகின்றனர். இந்நிலை அவரது இறுதி ஊர்வலம் 4.30 மணிக்கு நடைபெறுகிறது. ராஜாஜி அரங்கத்தில் இருந்து கருணாநிதியின் உடல் ஊர்வலமாக மெரினா கொண்டு செல்லப்படுகிறது. அவரது எப்படியாவது அஞ்சலி செலுத்த வேண்டும் என தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். இதேபோல் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.