21 உயிர்களைக் கொடுத்து போராடிய வன்னியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை கலைஞர் சூழ்ச்சி செய்து கூடுதலாக 107 சாதிகளுக்கு அள்ளிக்கொடுத்தார். நல்ல கனி என்று அழுகிய கனியைக் கொடுத்து ஏமாற்றினார் என பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ளார் திமுக எம்.பி செந்தில் குமார். 

இதுகுறித்து ராமதாஸ் ட்விட்டர் பதிற்கே சென்று பதிலளித்துள்ள அவர், ’’21 பேர் சுடப்பட்டது எம்.ஜி.ஆர் ஆட்சியில். 20% இடஒதுக்கீட்டை தர மறுத்தது அதிமுக. 20%இடஒதுக்கீட்டை தந்தது திமுக. கலைஞருக்கு பாராட்டு நடத்தியது பெரிய ஐயா. உயிர் நீத்த 21 வன்னியர்கள் குடும்பங்களுக்கு 3லட்சம் நிதி உதவி வழங்கியது திமுக. அந்த குடும்பங்களுக்கு 3000 மாத பென்ஷன் உதவி வழங்கியது திமுக’’ எனத் தெரிவித்துள்ளார்.