கடந்த வெள்ளியன்று நள்ளிரவு 1.30 மணிக்கு கோபாலபுரம் வீட்டில் இருந்து கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.  கடந்த இரண்டு நாட்களாக  தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில் இன்னும் சில நிமிடத்தில், காவேரி மருத்துவமனை, கருணாநிதி குறித்து மூன்றாவது அறிக்கை வெளியிட இருக்கிறார்கள்.

இந்நிலையில், கருணாநிதி மீண்டும் சீரியஸ் என்ற தகவலால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை நன்றாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனாலும் மருத்துவமனைக்கு வெளியே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

 காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி குடும்பத்தினர் தொடர்ந்து  வருகை புரிந்துள்ளனர். ஸ்டாலின், அழகிரி, உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் கனிமொழி, ராசாத்தி அம்மாள் ஆகியோரும் திடீர் என மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், தொண்டர்கள்  சென்னையில் குவிந்துள்ளதால் பதட்டம் நிலவி வருகிறது.