விடுதலைப் புலிகள் தொடர்பான காங். நிலைப்பாடு மாற வேண்டும்: கார்த்தி சிதம்பரம் பரபரப்பு பேச்சு
விடுதலைப்புலிகள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் பார்வை மாற வேண்டும் என, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசா் தலைமையில்,
சென்னை மண்டல காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது. அதில் உரையாற்றிய கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் கட்சியில் 70 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர் என்று பொய் சொல்ல வேண்டாம் எனக்கேட்டுக் கொண்டார்.
சமுதாயத்திற்கு ஏற்ப காங்கிரஸ் கட்சியினர் மாற வேண்டும் எனவும், பழைய வரலாறுகளை காங்கிரஸ் கட்சியினர் பேச வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.
ராஜீவ் கொலையை வைத்து, காங்கிரஸ் கட்சியினர் பேசி வருவதாகவும், தற்போது உள்ள மக்கள் கடந்த 2009ல் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த நிகழ்வுகளையே பார்க்கிறார்கள் என்றும் கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
