சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சின்னச் சின்ன கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். இதுபோன்ற முரண்பாடுகள் எல்லா கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயும் உள்ளது. ஆனால், ஆட்சி மாற்றம், இந்தி எதிர்ப்பு, மதச்சார்பின்மை போன்ற பெரிய கொள்கை விஷயங்களில் காங்கிரஸ் திமுக கூட்டணி இடையே எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது.” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.


அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், “பிரதமர் மோடி,  ஹவுடி மோடி, நமஸ்தே ட்ரம்ப் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பிரதமர் மோடி டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததும், இன்னொரு நாட்டு அரசியலில் தலையிட்டதும் ராஜாங்க உறவுக்கு ஏற்புடையது அல்ல என்று அப்போதே ராகுல் காந்தி சுட்டிகாட்டினார். காங்கிரஸ் கட்சியும் சுட்டிக்காட்டியது.” என்று தெரிவித்தார்.